Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயில், Sulakkal - 642110, கோயம்புத்தூர் .
Arulmigu Mariyamman Vinayagar Temple, Sulakkal - 642110, Coimbatore District [TM009775]
×
Temple History

தல வரலாறு

சூலக்கல் முன்னர் அடர்ந்த வனப்பகுதியாகவும், சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆடு மாடுகளுக்கு மிகச் சிறந்த மேய்ச்சல் பகுதியாகத் இருந்துள்ளது. அடர்ந்த இந்த வனப்பகுதியில் இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேளாளர் ஒருவரின் பசுக்கள் வழக்கம்போல் இப்பகுதியில் மேய்ந்து வந்துள்ளன. மாலையில் அவற்றைப் பட்டியில் கொண்டு வந்து அடைப்பது வேலைக்கார பையன்கள் செய்து வரும் வேலை ஆகும். அவ்வாறு ஆநிரை மேய்த்து வரும் நாளில், பசுக்களின் பால் குன்றுவதைக் கண்ட உழவர் பெருமக்கள் கவலை மிகக் கொண்டனர். அவர்கள் மாட்டுக்காரப் பையன்களைக் கேட்டும் பயன் இல்லாததால் ஒருநாற் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பசுக்கள் ஓர் இடத்தில் கூட்டமாக இருந்ததைக் கண்டு பசுக்களை விரட்டியுள்ளனர். அப்போது பசுக்கள் மிரண்டு...