தல வரலாறு
கோயமுத்தூர் - பொள்ளாச்சி நெடுவழியில் அமைந்துள்ள ஒத்தக்கால்மண்டபம் கிராமத்தில் அருள்மிகு நவகோடி நாராணயப்பெருமாள் திருக்கோயிலின் வடக்குபுற சுற்றுமதில் அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள மயானத்தில் மண் அகற்றியபோது ஒருபுற்று தென்பட்டதாகவும், அப்புற்றில் ஒரு ராஜநாகம் பாம்பு வெளியே வந்ததாகவும், அதனைப்பார்த்து பயந்து வியந்த அப்பகுதி மக்கள் அந்த இடத்தை அங்காளம்மனாக வழிபட்டதாகவும், பின்னர் நாளடைவில் மேற்படி இடத்தில் அங்காளம்மன் திருக்கோயில் கட்டப்பட்டதாகவும் செவிவழிச்செய்திகள் வரலாற்றை கூறுகின்றன. மேற்படி திருக்கோயில் அமைந்துள்ள இடம் அவ்வூர் மக்கள் மயான பூமியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.