Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோயில், சலீவன் வீதி, குமாரபாளையம் - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Venugopala Krishna Swamy Temple, Saleevn Street, Coimbatore - 641001, Coimbatore District [TM009789]
×
Temple History

தல வரலாறு

ஆலய வரலாறு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதுள்ள கோயில் அமைவிடமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் வயல் வெளிகளாகவும், ஆநிரை மேய்க்கும் பகுதிகளாகவும் இருந்தன. அந்த இடத்தில் மாடு மேய்க்கும் ஆயர் சிறுவர்கள் விளையாட்டிற்கும் தாங்கள் வழிபாடு செய்வதற்கும் தங்களின் குல முதல்வனான கோபாலனை வழிபட்டு வந்தனர். கோபாலனும் அச்சிறுவர்களின் பக்திக்கு இரங்கி குழந்தைகள் கட்டிய சிறுகோயிலில் குடிபுகுந்து ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரான் எனும் ஆழ்வாரின் அமுத மொழிக்கேற்ப அவர்கள் செய்யும் வழிபாடுகளை ஏற்று வந்தான். இத்தருணத்திலே மைசூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த உடையார் வம்சத்து மன்னர்களில் ஒருவரான கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் கோவை மாநகரமும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து...