Screen Reader Access     A-AA+
அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில், -, Pollachi - 642001, கோயம்புத்தூர் .
Arulmigu Badrakali Amman Temple, -, Pollachi - 642001, Coimbatore District [TM009805]
×
Temple History

தல பெருமை

பலப்பல வளப்பங்களை தன்னிடத்திற்கொண்டதுமாகி விளங்கும் கொங்கு மண்டலத்தின் புகழ்சேர் பொள்ளாச்சி திருநகருக்கு அணிகலனாக விளங்குவது அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலாகும். பல தெய்வீக வளங்களோடு வளர்ந்தோங்கி வருகின்ற இத்திருக்கோயில் பல மகிமைகளை உள்ளடக்கியதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவரால் பிரதிட்டை செய்யப்பெற்ற திருமேனியை உடையது. இத்திருமேனியை நாக தேவதை நாள்தோறும் வந்து வணங்கி செல்லும் சிறப்பை உடையது. தினமும் பாலாபிஷேகம் நிகழ்வுறும் வியப்பை உடையது. பூமி மட்டத்திலிருந்து 7 அடி உயரத்தில் கட்டப்பட்ட நூதன கருவறை முழுதும் கல்ஹாரமாகும். கருவறை விமானம் நாகரம் என்னும் நீள்சதுர வடிவில் மூன்று நிலையும், மூன்று ஸ்தூபிக் கலசங்களையும் உடையது. அர்த்தமண்டபத்தின் முன்வாயில் நிலையில் அஷ்ட சக்திகளின் திருமேனி பொறிக்கப்பட்டுள்ளது. கருவறை முதல் திருச்சுற்றின் கிழக்கு திக்கில் மகேஸ்வரியும்,...