Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Kalapatti, Coimbatore - 641048, கோயம்புத்தூர் .
Arulmigu Mariyamman Temple, Kalapatti, Coimbatore - 641048, Coimbatore District [TM009821]
×
Temple History

தல வரலாறு

முன்பு ஒரு காலத்தில் மைசூர் ராஜ்யத்தில் வான் பொய்த்து வளம் ஒழிந்து பஞ்சம் தோன்றியது. இந்நிலையில் அவ்விடம் வாழ் ஒக்கிலிய கவுண்டர் மக்கள் இடம் பெயர முடிவு செய்தனர். ஆனால் எங்கு செல்வது என தீர்மானிக்க இயலாமல் திகைத்தனர் அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து அவர்களால் வணங்கப்படும் குலதெய்வம் மாரியம்மன் பிரசன்னமானாள் கன்னிப்பெண் மூலம் அருள்பாலித்த அம்மனை மக்கள் சூழ்ந்து வணங்கி தங்கள் இன்னலை எடுத்தியம்பி வாழும் வழி கேட்டனர். அம்மனின் அருள்வாக்கின்படி தென்திசை நோக்கி பயணிக்க தீர்மானித்தனர். லிங்க வடிவிலேயே இருந்த மாரியம்மன் திருமேனியை மூங்கில் கூடை ஒன்றில் வைத்துக் கொண்டு புறப்பட்டனர். இவ்வாறு பல நாட்கள் பயணத்தினிடையே ஒருநாள் காளப்பட்டி என்று தற்போது...