அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், Ramachiampalayam, Sulur - 641668, கோயம்புத்தூர் .
Arulmigu Makaliamman Temple, Ramachiampalayam, Sulur - 641668, Coimbatore District [TM009846]
×
Temple History
தல பெருமை
முன்பு ஒரு காலத்தில் வளமிக்க இராமாச்சியம்பாளையத்தின் ஊர்க்கவுண்டர், உறங்கிக்கொண்டிருக்கையில் கனவில் ஸ்ரீ மாகாளியம்மன் தோன்றி நான் நொய்யல் ஆற்றின் அணைக்குழியில் பதிகொண்டுள்ளேன் என்னை எடுத்து வந்து எனக்கு ஆலயம் அமைப்பாயாக என்று கட்டளையிட்டதாகவும், அதே நேரத்தில் ஸ்ரீ மாகாளியம்மன் ஒரு தாசருக்கும், ஒரு பண்டிதருக்கும் கனவில் தோன்றி அவ்விதமே அறிவித்ததாகவும், கூறப்படுகிறது,
ஊர்க்கவுண்டர் வீட்டில் எல்லோரும் கூடி ஆற்றில் அம்மனை எடுத்துவர முடிவு செய்து திரிசூலம் தாங்கி முன்னே செல்ல அவர் பின்னே, மேள, தாள, வாத்தியங்களுடன் ஊர்பொதுமக்களும் அணைக்குழி நோக்கிச் சென்றதாகவும், ஊர்க்கவுண்டர் குறிப்பிட்டு காட்ட தாசரும், பண்டிதரும் அணை குழியில் 2 முறை முழ்கி கிடைக்கப்பெறாமல் 3-ஆம் முறையாக அம்மன் அறிவித்த அங்க அடையாளம், கலையாத சந்தனப்பொட்டு இவற்றோடு அம்மனின்...முன்பு ஒரு காலத்தில் வளமிக்க இராமாச்சியம்பாளையத்தின் ஊர்க்கவுண்டர், உறங்கிக்கொண்டிருக்கையில் கனவில் ஸ்ரீ மாகாளியம்மன் தோன்றி நான் நொய்யல் ஆற்றின் அணைக்குழியில் பதிகொண்டுள்ளேன் என்னை எடுத்து வந்து எனக்கு ஆலயம் அமைப்பாயாக என்று கட்டளையிட்டதாகவும், அதே நேரத்தில் ஸ்ரீ மாகாளியம்மன் ஒரு தாசருக்கும், ஒரு பண்டிதருக்கும் கனவில் தோன்றி அவ்விதமே அறிவித்ததாகவும், கூறப்படுகிறது,
ஊர்க்கவுண்டர் வீட்டில் எல்லோரும் கூடி ஆற்றில் அம்மனை எடுத்துவர முடிவு செய்து திரிசூலம் தாங்கி முன்னே செல்ல அவர் பின்னே, மேள, தாள, வாத்தியங்களுடன் ஊர்பொதுமக்களும் அணைக்குழி நோக்கிச் சென்றதாகவும், ஊர்க்கவுண்டர் குறிப்பிட்டு காட்ட தாசரும், பண்டிதரும் அணை குழியில் 2 முறை முழ்கி கிடைக்கப்பெறாமல் 3-ஆம் முறையாக அம்மன் அறிவித்த அங்க அடையாளம், கலையாத சந்தனப்பொட்டு இவற்றோடு அம்மனின் திருவுருவச்சிலையை அணைக்குழியில் இருந்து கண்டெடுத்து அருள்மிகு மாகாளியம்மனை கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். கண்கள் தெரியாத நிலையில் வந்த சிறுவன் ஒருவன் கண்களுக்கு, அம்மனின் தீர்த்தம் போட்ட உடனே கண்களில் ஒளி பெற்று குணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
நம்பி வந்த மக்களுக்கு நல்ல அருள்புரிந்து காப்பாற்றி வரும் ஸ்ரீ மாகாளியம்மனுக்கு ஊர் பொது மக்கள் உயர்ந்த பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வருகின்றனர். அருள்மிகு மாகாளியம்மன் கிராம தேவதையாக அருள் பாலித்து வருகின்றார்.