Screen Reader Access     A-AA+
அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோயில், Sundakkamuthur, Coimbatore - 641042, கோயம்புத்தூர் .
Arulmigu Visalatchi Vnayagar Temple, Sundakkamuthur, Coimbatore - 641042, Coimbatore District [TM009869]
×
Temple History

தல வரலாறு

கொங்குநாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரின் மேற்கே அமைந்து இருக்கும் மிக ரம்மியமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ஒரு நகரமைப்பு தான் கோவைப்புதூர் இவ்வூர் மக்களின் நல்வாழ்விற்கும், வளத்திற்கும் நான் உறுதுணையாய் நிற்கிறேன் என பறைசாற்றிக்கொண்டு இந்த ஊரின் முதல் கோயிலாய், முதல் தெய்வமாய் 1984-ம் வருடம் முதல் அருள் ஆட்சியும், அருட்காட்சியும், சாட்சியுமாய் கிழக்கு முகம் நோக்கி அன்னை அருள்மிகு விசாலாட்சியம்மன் அருகில் இறைவனார் ஸ்ரீ விஸ்வநாதருடன் இருமருங்கிலும் தம் இரு புதல்வர்களாம் ஸ்ரீ ஞானவிநாயகர், ஸ்ரீ ஞானமுருகனுடனும் தல விருட்சமாக ஸ்ரீ வில்வமரமும் சூழ வலது கரத்தில் மலரைக் கொண்டு புன்சிரிப்புடன் அருள்பாலிக்கிறாள்