அருள்மிகு மைதானமாரியம்மன் திருக்கோயில், Chikkadasampalayam, Coimbatore - 641301, கோயம்புத்தூர் .
Arulmigu Maithanamariamman Temple, Chikkadasampalayam, Coimbatore - 641301, Coimbatore District [TM009892]
×
Temple History
தல வரலாறு
ஸ்தல வரலாறு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் மற்றும் நகர் காந்தி மைதானம் பகுதியில் கோவை-உதகை நெடுஞ்சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுதந்திரம் அடைவதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மலையிலிருந்து சமவெளி பகுதிக்கு வரும் ஆங்கிலேய படை வீரர்கள் மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கினர். மேலதிகாரிகள் மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியில் ஓய்வு எடுப்பார்கள். அந்த நேரத்தில் படை வீரர்களில் ஒரு சிப்பாய்க்கு அம்மை ஏற்பட்டது. மேற்படி அம்மை ஏற்பட்டதனை பெருங்குற்றமாக கருதி மேற்படி சிப்பாயை தனிமைப்படுத்தி விடுவார்கள். அந்த நேரத்தில் மேலதிகாரி ஒருவரின் கனவில் அம்மன் காட்சியளித்து, தான்...ஸ்தல வரலாறு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் மற்றும் நகர் காந்தி மைதானம் பகுதியில் கோவை-உதகை நெடுஞ்சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சுதந்திரம் அடைவதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மலையிலிருந்து சமவெளி பகுதிக்கு வரும் ஆங்கிலேய படை வீரர்கள் மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கினர். மேலதிகாரிகள் மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியில் ஓய்வு எடுப்பார்கள். அந்த நேரத்தில் படை வீரர்களில் ஒரு சிப்பாய்க்கு அம்மை ஏற்பட்டது. மேற்படி அம்மை ஏற்பட்டதனை பெருங்குற்றமாக கருதி மேற்படி சிப்பாயை தனிமைப்படுத்தி விடுவார்கள். அந்த நேரத்தில் மேலதிகாரி ஒருவரின் கனவில் அம்மன் காட்சியளித்து, தான் பவானி ஆற்றங்கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கல் ரூபத்தில் இருப்பதாகவும் தன்னை எடுத்து வந்து ஓரிடம் அமைத்து பூஜிக்க வேண்டுமெனவும் கூறி மறைந்தது. அதன்படி அந்த அதிகாரி மைதானம் வந்து அங்கிருந்த பெரியவர்களிடமும், ஊர் பொது மக்களிடமும் தான் கண்ட கனவு பற்றி கூறினார். பெரியோர்களும், பொது மக்களும் எடுத்த முடிவின்படி பவானி ஆற்றங்கரையில் ஓரிடத்தில் கல் ரூபத்தில் அம்மன் இருப்பதைக் கண்டு மைதானம் பகுதியில் ஒரு இடம் தேர்வு செய்து குடிசை அமைத்து கற்சிலை வைத்து பூஜைகள் செய்து வழிபட தொடங்கினர். அதே நேரத்தில் அம்மை ஏற்பட்ட சிப்பாயின் உடம்பிலிருந்த அம்மை படிப்படியாக குறைத்து பூரண குணமடைந்தார். பின்வரும் காலத்தில் ஆகம விதிப்படி அம்மனை பிரதிஸ்டை செய்து வழிபட்டு வந்தனர். அம்மனை வழிபடும் மக்கள் பல நன்மை அடைந்து வந்தனர்.
இத்திருக்கோயிலின் மாரியம்மன் பண்ணாரி, அருள்மிகு மாரியம்மனின் தங்கை என பாவித்து வழிபட்டு வருவது வழக்கமாக உள்ளது. பண்ணாரி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் குண்டம் சமயத்தில் தான் இத்திருக்கோயிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. குண்டம் மற்றும் தேரோட்டம் என இரண்டு நிகழ்வுகள் நடைபெற்று வருவது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும். மாற்று மதத்தினருக்கு அம்மை ஏற்படும் சமயத்தில் இத்திருக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு தீர்த்தத்தையும் வேப்பிலையையும் எடுத்து சென்று பூஜித்து வந்தால் அம்மை குணமடைவது இன்றும் கண்கூடாக காணமுடிகிறது.
08.04.1973 அன்று முதன்முதலில் குடமுழுக்கு நடைபெற்றது.அப்போது சிறிய தேர் ஒன்று பொது மக்களால் செய்து திருவிழா மற்றும் விஷேச நாட்களில் திருக்கோயிலை சுற்றி மெரமணை நடத்தப்பட்டு வந்தது. மேலும் பிற்காலத்தில் பொதுமக்கள், நன்கொடையாளர்களின் முயற்சியனால் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியன கட்டுவிக்கப்பட்டு 14.09.1990 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் திருக்கோயிலினை மராமத்து செய்தும் திருப்பணிகள் செய்தும் கடந்த 06.03.2003-ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. திருமணத்தடை, தோஷ நிவர்த்தி, குழந்தையின்மை போன்றவைகளுக்கு விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்தால் நன்மை ஏற்படும் என்பது ஐதீகமாகும்.