அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் வெங்கடரமண பெருமாள் திருக்கோயில், Thoppampatti, Coimbatore - 641017, கோயம்புத்தூர் .
Arulmigu Karivaradharajaperumal Temple, Thoppampatti, Coimbatore - 641017, Coimbatore District [TM009893]
×
Temple History
தல வரலாறு
திருக்கோயில் இருப்பிடம்
கோவை மண்டத்தில் நேர் வடக்கே வெள்ளிமலைத் தொடரின் ஒரு பகுதி மலையாக, குருடிமலையின் அடிவாரத்தில் தொப்பம்பட்டி எனும் சிற்றுரில் கரிவரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கோவை மாவட்டத்தில் கோவை நகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் தொப்பம்பட்டி பிரிவிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி-நாங்கள்
நம்பாவைக்குச் சாற்று நீராடினால் தீங்கின்றி
நாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து ஓங்கு
பெருஞ்செந்நெலூடு கயலுகளைப்பூங்குவளைப்
போதில் பொறிவண்டு கண்படுப்பத்-தேங்காதே
புக்கிருந்து சீர்த்த மூலை பற்றி வங்கக் குடம்
நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத
செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
...திருக்கோயில் இருப்பிடம்
கோவை மண்டத்தில் நேர் வடக்கே வெள்ளிமலைத் தொடரின் ஒரு பகுதி மலையாக, குருடிமலையின் அடிவாரத்தில் தொப்பம்பட்டி எனும் சிற்றுரில் கரிவரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கோவை மாவட்டத்தில் கோவை நகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் தொப்பம்பட்டி பிரிவிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி-நாங்கள்
நம்பாவைக்குச் சாற்று நீராடினால் தீங்கின்றி
நாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து ஓங்கு
பெருஞ்செந்நெலூடு கயலுகளைப்பூங்குவளைப்
போதில் பொறிவண்டு கண்படுப்பத்-தேங்காதே
புக்கிருந்து சீர்த்த மூலை பற்றி வங்கக் குடம்
நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத
செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
என்பது ஆண்டாள் நாச்சியார் அமுதமொழி
பாற்கடலூர் வையத்துயின்ற பரமன், உலகளந்த உத்தமன் ஆழிமழைக் கண்ணன், மாயன்வடமதுரை மைந்தன் துயபெருநீர் யமுனைத் துறைவன், ஆயர்குலத் தோன்றல் தாமோதரன்,கேசவன், தேவாதி தேவன், மாதவன் வைகுந்தன்,முகில் வண்ணன், பங்கயக்கண்ணன், மணிவண்ணன், நந்தகோபால், உம்பர் கோமான், மலர் மார்பன், நெடுமால் கோவிந்தன்,செல்வத்திருமால் வேங்கடவன், திருவரங்கன் என பலப்பல நாமங்கள் பெற்றவன் கரிவரதராஜப்பெருமாள் அந்த கரிவதராஜப்பெருமாள் தனக்கு ஆபத்து ஏற்பட்ட பொழுது ஆதிமூலமே என அழைத்துத் தனக்கேற்பட்ட துன்பத்தை நீக்கிக் கொண்டது கஜேந்திரன் உலகிலுள்ள உயிர்களுக்கு காக்கும் கடவுளாக விளங்குபவர் கரிவரதராஜப்பெருமாள். எனவே தொப்பம்பட்டியில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்கும் கரிவரதராஜப்பெருமாள் எனப் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.
திருமண் காப்பினை வணங்குதல்
நாமம் என்பதுமே திருமண் காப்பு எனப்படுகிறது. இதுஒரு வகை மண் இதைதிருமாலயடியார்கள் இறைவனின் சாயலாக அணிந்து கொள்கிறார்கள். இதன் மத்தியில் லட்சுமியின்அருட்சாயலாக செந்தூரம் அணிந்து கொள்கிறார்கள்.தென்கலைச் சம்பிரதாயத்தில் திருமாலின் திருவடிகளை திருமண் காப்பினை அணிந்து வழிபட்டுக் கொள்கின்றனர். அதனை இக்கோயிலில் தரித்துக் கொள்வது மிகவும் விசேசமாகும்.
பாஞ்சராத்ரம்
நாராயணரால் நாரதருக்கு ஐந்து இரவுகளில் அருளப்பட்டது பாஞ்சராத்ரம் ஆகும். இவற்றில் தேவாலயங்களுக்கு என்று ஏற்பட்ட தலங்கள் தேவாலய நிர்மானம் விக்கிரகப் பிரதிஷ்டை முறைகள், பூஜை காலங்கள், பூஜை பொருள்கள், உற்சவங்கள் கும்பாபிஷேக முறைகள், பூஜை செய்வோருக்குரிய தகுதிகள், முதலியன சொல்லப்பட்டுள்ளன. மேலும் மேலக்கோட்டை என்கிற திரு நாராயணபுரம் ஸ்ரீ ரங்கம், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலிலும் பஞ்சராத்ர முறைப்படி பூஜை நடைபெற்று வருகிறது.
விசேச நாட்கள்
ஸ்ரீவைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள், தைப்பொங்கல், நவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கோவை மாவட்டம், காரமடை அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் செயல் அலுவலரால் தக்கார் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்து பன்னிரெண்டு ஆண்டிற்கும் மேலாகிவிட்டதால் திருக்கோயிலை புதுப்பித்து செய்து குடமுழுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.