Screen Reader Access     A-AA+
அருள்மிகு அம்மணீஸ்வரர் திருக்கோயில், T.Kottampatti, Pollachi - 642002, கோயம்புத்தூர் .
Arulmigu Ammaneeswarer Temple, T.Kottampatti, Pollachi - 642002, Coimbatore District [TM009898]
×
Temple History

தல வரலாறு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் டி.கோட்டாம்பட்டி நகரில் அமைந்துள்ள அருள்மிகு அம்மனீஷ்வரர் திருகோயில் சட்டப்பிரிவு நார்பதாரு உட்பிரிவு ஒன்றின் கீழ் இரண்டாம் நிலை செயல் அலுவலர் மற்றும் தக்கார் நிர்வாகத்தில் உள்ளது. எழில் கொஞ்சும் கொங்கு நாட்டில் பொள்ளாச்சி நகரின் வடகோடியில் பெரும் குடியிருப்பு பகுதியாக வளர்ந்து வரும் மகாலிங்கபுரத்திற்க்கு கிழக்கே டி.கோட்டாம்பட்டி என அழைக்கப்படும் தொட்டிய கோட்டாம்பட்டியில் அருள்மிகு அம்மனீஷ்வரர் திருகோயில் அமைந்துள்ளது. சுமார் இருபத்தைந்து சென்ட் பரப்பளவில் சுற்றிலும் மதில்சுவர்கள் எழுப்பப்பட்டு அதில் நடு நாயகமாக விளங்கும் இத்திருகோடயிலின் மகாமண்டபத்தில் விநாயகர் சன்னதியும் முருகர் சன்னதியும் அமைய பெற்றுள்ளது. கிழக்கு நோக்கி அருள்மிகு அருள்நாயகி அம்மையும் வடக்கு நோக்கி அம்மணீஷ்வரரும் அமர்ந்துள்ளார்கள்.