Screen Reader Access     A-AA+
அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை, Coimbatore - 641022, கோயம்புத்தூர் .
Arulmigu Villeswarar Temple, Idigarai, Coimbatore - 641022, Coimbatore District [TM009907]
×
Temple History

இலக்கிய பின்புலம்

கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட இடிகரை அருள்மிகு வில்லீவரர் திருக்கோயிலை கொங்கு சோழர்களுள் ஒருவரான விக்ரம சோழன் புதுப்பித்தார். வில்லீவரர் திருக்கோயில் கட்டுவதற்கு முன்னர் இருகூர் நகரை கடந்து இருண்ட வனத்தில் இடம் தேடி வந்து கொண்டிருந்தான் கரிகாலன். அப்போது அந்த பகுதியை ஆண்ட சேர மன்னனிடம் பலி கேட்டால் காட்டின் காவல் தெய்வமான வில்லி துர்க்கை பத்ரகாளி. சேர மன்னன் இந்த விபரத்தை சோழனிடம் தெரிவித்தான். அப்போது காட்டை அழித்து ஊராக்கிய பின் துர்க்கைக்கு கோயில் கட்டுவதாக சொன்னான் கரிகாலன் . பின்னர் காட்டை அழிக்கும் போது வில்லீவரர் என்னும் சிவலிங்கம் அவனுக்கு கிடைத்தது. எனவே அதை வைத்தே இடிகரையில் ஸ்ரீ வில்லீவரர் ஆலயத்தை கட்டினான் என்பது வரலாறு. ஈசனுக்கு வில்லீவரர் என...