Screen Reader Access     A-AA+
அருள்மிகு விநாயகர் பட்டத்தரசியம்மன் திருக்கோயில், காமராஜபுரம், காமராஜபுரம் - 641002, கோயம்புத்தூர் .
Arulmigu Vinayakar Pattatharasi Amman Temple, Kamarajapuram, Coimbatore - 641002, Coimbatore District [TM009910]
×
Temple History

தல பெருமை

கோவை மாவட்டம் , கோவை தெற்கு வட்டம், காமராஜபுரம் நகரமானது நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அருந்ததியர் சமூக மக்களின் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களின் குலதெய்வமான பட்டத்தரசியம்மனுக்கு ஒரு கோயிலை கட்டுவதற்காக ஒரு பகுதியை ஒதுக்கி அங்கு பட்டத்தரசியம்மன் கோயிலை கட்டினார்கள். காமராஜபுரத்தில் வாழும் மக்கள் தங்கள் குடும்ப சுபநிகழ்ச்சிகள் அனைத்தயும் தங்கள் குலதெய்வமான பட்டத்தரசியம்மனின் அருள் வாக்கை பெற்றபிறகே ஆரம்பிப்பார்கள். குழந்தைகளுக்கு காது குத்தல், நிச்சயதார்த்தம், திருமணம் ஆகிய அனைத்து சுப நிகழ்ச்சிகளும் இத்திருக்கோயிலிருந்தே தொடங்கப்படும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் சிதிலமடைந்த காரணத்தினால் இடிக்கப்பட்டு, 2015 டிசம்பர் ஆறாம் நாள் பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது புதியதாக...