Screen Reader Access     A-AA+
அருள்மிகு நவகோடி நாராயணப்பெருமாள் திருக்கோயில், ஒத்தக்கால்மண்டபம், Coimbatore - 641032, கோயம்புத்தூர் .
Arulmigu Navakodi Narayanaperumal Temple, Othakkalmandapam, Coimbatore - 641032, Coimbatore District [TM009945]
×
Temple History

தல வரலாறு

முன்னொரு காலத்தில், கொங்குநாடு 24உட்பிரிவுகளை கொண்டதாக இருந்தது. அதில் வாராக்கா நாடு என்பதும் ஒன்றாகும். ஒத்தக்கால்மண்டபம் என்ற ஊர் வாராக்கா நாட்டில், கோவை-பொள்ளாச்சி நெடுவழியில் அமைந்திருந்தது. கொங்குநாட்டு மன்னர்களின் ஒற்றர்கள், சேர, பாண்டிய நாடுகளுக்கு இவ்வழியாகவே சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் வழியில் ஓய்வு எடுக்கும் பொருட்டு ஒத்தக்கால்மண்டபத்தில் மூன்றடுக்கு சுற்றுசுவர் கொண்ட கோட்டையும் கோட்டையின் உள்ளே பெருமாள் கோயிலும் அமைத்திருந்தனர் என்பது செவிவழிச் செய்தியாகும். காலப்போக்கில், கோட்டையும் மதில்சுவர்களும் அழிந்துவிட்ட நிலையில், பெருமாள் கோயில் மட்டும் எஞ்சியிருந்தது. மேலும் விஜய நகர மன்னர்கள் காலத்தில் மக்களிடம் வசூலித்த நவநிதியங்களை இப்பெருமாள் திருக்கோயிலில் வைத்து வழிபட்டு வந்தனர். இதுவே காலப்போக்கில் நவகோடி நாராயணப்பெருமாள் என பெயர்பெற்றது. மிகவும் பழுதடைந்த திருக்கோயிலை பொதுமக்கள் ஒத்துழைப்புடன், 13வது...