இத்திருக்கோயிலில் மாண்புமிகு முதலமைச்சரின் அன்னதானம் திட்டம் 14.01.2006 அன்று முதல் தொடங்கப்பெற்றது. அன்னதானக் கூடம் இத்திருக்கோயிலின் கூரத்தாழ்வான் சன்னதியின் வலது புறம் உள்ளது. தினசரி நண்பகல் 12.00 மணியளவில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டணம் ரூ.1750/- மற்றும் ரூ.35,000/- கட்டளை முதலீடு செய்தால், வருடத்தில் கட்டளைதாரர் குறிப்பிடும் நாளில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.