வள்ளற்பெருமானாரின் கொள்கையில் தலையாயது சீவகாருணியம். அற்றார் அழிபசி தீர்த்தலாகிய சீவகாருணிய பேரறத்தை நடத்துவதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையை 23,05,1867 ல் பிரபவ ஆண்டு வைகாசி 11 ஆம் நாளில் நிறுவினார்கள். தருமச்சாலையை நிறுவியபின் அதனையே உறைவிடமாகக் கொண்டார்கள். 1870 ஆம் ஆண்டு வரை தருமச்சாலையிலே வாழ்ந்தார்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய பெருமானாரின் அருளினால் தருமச்சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுமார் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது