இறையருள் பெற திருக்கோயில்களுக்கு வருகை தரும்பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டம் ஆகும். மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அன்னதான நன்கொடையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மேலத்திருமாணிக்கம் என்ற பெயருக்கு அனுப்பலாம்