மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 100 பயனாளிகளுக்கும், மற்ற நாட்களில் 50 பயனாளிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக் கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திருக்கோயில் அன்னதானத் திட்டத்திற்கு 80ஜி வருமான வரி விலக்குப் பெறப்பட்டது.