மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் என்பது தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். 1 இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலினை கதவுக் கோயில் என்று அழைக்கின்றனர். மூலவராக சிலைகளையோ, படங்களோ இல்லாமல் கதவினை மட்டுமே காமாட்சியம்மனாக வழிபடுகின்றனர். இக்கோயில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கோயிலாகவும், சுற்றுலாதளமாகவும் உள்ளது.