மாண்புமிகு தமிழக முதல்வா் அவா்களின் அன்னதான திட்டம் இத்திருக்கோயிலி்ல் 14.04.2003ம் நாள் முதல் துவங்கப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 நபா்களுக்கு ரூ.1250/-ம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் 100 நபா்களுக்கு ரூ.2500/-ம் செலுத்தி ஒரு நாள் அன்னதானம் செய்யலாம். நிரந்தர கட்டளைதாரா் ஆக விரும்பும் அன்பா்கள் ரூ.25000/- செலுத்தினால் கிடைக்கப்பெறும் வட்டி தொகையில் ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் விரும்பும் நாளில் 50 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.இத்திட்டத்திற்கு சட்டம் 80(ஜி)-ன் கீழ் வருமான வாிவிலக்கு உண்டு.