உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கற்பதற்காக 1000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரையும், பூசாரி, பூசாரியின் மகன் அல்லது மகளின் திருமணத்திற்கு 3000 முதல் 5000 ரூபாய் வரையும், பூசாரியின் மனைவி அல்லது மகளின் மகப்பேறு தொடர்பான உதவிகளுக்கு 6000 ரூபாயும், உறுப்பினர் மரணமடைந்தால் அவரது இறுதி சடங்கிற்கு 5000 ரூபாயும் மற்றும் உறுப்பினர் மரணமடைந்தால் அவரது வாரிசுதார்ருக்கு 50000 ரூபாயும் நிதி உதவி வழங்கப்படுகின்றன. இவ்வாரியத்தின் உறுப்பிர்கள் நலத்திட்ட நிதி உதவி பெறுவதற்கன ஆண்டு உச்ச வரம்பு வருமானம் ரூ.72,000/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3700 உறுப்பினர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வாரியத்தின் பணிகளை மேற்கொள்ள ஒரு உதவி ஆணையர் / நிர்வாக அலுவலர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு தட்டச்சர் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1.மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500/-
2.பூசாரியின் மகன் / மகளுக்கு கல்வி பயில, நிதியுதவித் திட்டம்
2.1. 10-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.1000/-
2.2. மேல்நிலை இரண்டாம் வகுப்பு மற்றும் தேர்ச்சி ரூ.1500/-
2.3. இளநிலை பட்டப்படிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் ரூ.1500/-2.4. இளநிலை பட்டப்படிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் (விடுதியில் தங்கி படிப்போருக்கு) ரூ.1750/-
2.5. முதுநிலை பட்டப்படிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் ரூ.2000/-
2.6. முதுநிலை பட்டப்படிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் (விடுதியில் தங்கி படிப்போருக்கு) ரூ.3000/-
2.7. இளநிலை தொழில் சார்ந்த பட்டப்படிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் ரூ.2000/-
2.8. இளநிலை தொழில் சார்ந்த பட்டப்படிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் (விடுதியில் தங்கி படிப்போருக்கு) ரூ.4000/-
2.9. முதுநிலை தொழில் சார்ந்த பட்டப்படிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் ரூ.4000/-
2.10. முதுநிலை தொழில் சார்ந்த பட்டப்படிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் (விடுதியில் தங்கி படிப்போருக்கு) ரூ.6000/-
2.11. தொழில் பயிற்சி நிலையத்தில் பயில ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் ரூ.1000/-
2.12. தொழில் பயிற்சி நிலையத்தில் பயில ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் (விடுதியில் தங்கி படிப்போருக்கு) ரூ.1200/-
3.பூசாரி / பூசாரியின் மகள் / பூசாரியின் மகன் திருமணத்திற்கு நிதியுதவி
3.1. பூசாரியின் திருமணத்திற்கு ரூ.3000/-
3.2. பூசாரியின் மகனின் திருமணத்திற்கு ரூ.3000/-
3.3. பூசாரியின் மகளின் திருமணத்திற்கு ரூ.5000/-
4.பூசாரி / பூசாரியின் மனைவி / பூசாரியின் மகள் மகப்பேறு / கருச்சிதைவு / கருக்கலைப்பு நிதியுதவி
4.1. பூசாரி / பூசாரியின் மனைவி / பூசாரியின் மகள் மகப்பேறு நிதியுதவி ரூ.6000/-
4.2. பூசாரி / பூசாரியின் மனைவி / பூசாரியின் மகள் கருச்சிதைவு / கருக்கலைப்பு நிதியுதவி ரூ.6000/-
5.இயற்கை எய்திய பூசாரியின் ஈமச்சடங்கு செய்வதற்கு ரூ.5000/-
6.உறுப்பினர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு 50000/-
சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசாணை எண்.174 நாள் 16.12.2020-ன்படி பூசாரியின் ஆண்டு உச்ச வரம்பு வருமானம் ரூ.72,000/-ஐ தாண்டக்கூடாது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதினை நிறைவு செய்த, ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தினை ரூ.1000/-லிருந்து ரூ.3000/-ஆக உயர்த்தியும், ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பினை ரூ.24,000/-லிருந்து ரூ.72,000/- ஆகவும் உயர்த்தி நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.