நகரங்களில் சிறந்ததாக புகழ் பெற்று விளங்கும் காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் வழிபாடு சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. திகட சக்கரச் செம்முக மைந்துளான் என்று வாழ்த்துப் பாடலாக துவங்கும் கந்தபுராணம் அரங்கேற்றம் நடைபெற்றதும் இத்தலத்தில் தான். எனவே, இங்கு அதற்கு முன்பாகவே இருந்திருக்க வேண்டும். கட்டடக் கலை அமைப்பினை பார்க்கும் பொழுது 12-13 ஆம் நூற்றாண்டுகளில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை அரங்கேற்றிய பின்னர் தொண்டை நாட்டு 24 கோட்டத்தாரும், அவரை பல்லக்கினர் ஏற்றுவித்து நகர் வலம் வரச் செய்தி மரியாதையுடன் சிறப்பு செய்ததாகப் படிக்காசுப் புலவரும் பாடி போற்றியுள்ளார். 1930 ஆம் ஆண்டுகளில் நகரத்தார் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.