திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உடுமலைப்பேட்டை வட்டத்தில் அதிக அளவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு திருமூர்த்தி, கஞ்சிமலையப்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படுவதிலிருந்து இத்தலத்தின் பெருமையை அறியலாம். இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க இத்திருக்கோயில் உடுமலைப்பேட்டைக்குத் தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் பழனி என்னும் திருவாவினன்குடி திருத்தலத்திலிருந்து தென்மேற்கு 45 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆனைமலைத் தொடர்ச்சியில் அழகுற அமைந்துள்ளது. இயற்கை அன்னை எழில் நடனம் புரியும் மேற்குத்தொடர்ச்சி மலைச் சாரலில் தோன்றி சலசலத்து ஓடிவரும் தோணிநதி என்னும் பாலாற்றங்கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள ஒரு குன்றில் அருங்காட்சியளிக்கிறார்கள். திருமூர்த்திகளான அயன்,அரன்,அரி ஆகியோர் இங்கு எழுந்தருளியுள்ள கடவுளர்கள் மும்மூர்த்திகளாகும். ஆனாலும் பெரிதும் பேசப்படுவது அமணலிங்கேஸ்வரர் தான். நதித்தீரங்களையே...திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உடுமலைப்பேட்டை வட்டத்தில் அதிக அளவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு திருமூர்த்தி, கஞ்சிமலையப்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படுவதிலிருந்து இத்தலத்தின் பெருமையை அறியலாம். இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க இத்திருக்கோயில் உடுமலைப்பேட்டைக்குத் தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் பழனி என்னும் திருவாவினன்குடி திருத்தலத்திலிருந்து தென்மேற்கு 45 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆனைமலைத் தொடர்ச்சியில் அழகுற அமைந்துள்ளது. இயற்கை அன்னை எழில் நடனம் புரியும் மேற்குத்தொடர்ச்சி மலைச் சாரலில் தோன்றி சலசலத்து ஓடிவரும் தோணிநதி என்னும் பாலாற்றங்கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள ஒரு குன்றில் அருங்காட்சியளிக்கிறார்கள். திருமூர்த்திகளான அயன்,அரன்,அரி ஆகியோர் இங்கு எழுந்தருளியுள்ள கடவுளர்கள் மும்மூர்த்திகளாகும். ஆனாலும் பெரிதும் பேசப்படுவது அமணலிங்கேஸ்வரர் தான். நதித்தீரங்களையே தமது அருள்பாலிக்கும் இடமாக்க் கொண்டவன் பரமேஸ்வரன். ஆகவே இங்கு பாய்ந்தோடிவரும் தோணி நதிக்கரையில் கோவில் கொண்டதால் அந்த சர்வேஸ்வரன் நாம்மே மேலோங்கி விட்டதென கொள்ளலாம். இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் அமலலிங்கம் என்று முன்னர் வழங்கப்பட்டு வந்தது . பின்னர் அமணலிங்கம் என்று திரிந்து பட்டதாகக் கூறுகின்றனர். அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்று பொருள்படும் .
அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள். இயல்பாகவே குற்றங்களிலிருந்து நீங்கிய இறைவனே அமணலிங்கமாகும். எனவே ஆன்மாவினின்றும் ஆணவம், கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் விட்டொழித்து வெற்றி பெற விழைவோர் அனைவரும் அருள்மிகு அமணலிங்கேஸ்வரரைத் தொழுதால் மும்மலங்கள் நீங்கி முக்தி பேரடையலாம். இத்தகு சிறப்புடைய மூர்த்தி இங்கு குன்றமே லிங்கமாக காட்சி வழங்க அருளுவது கண்கூடு.
தற்போது தளி என்றழைக்கப்படும் சிற்றூர் அக்காலத்தில் தளி பாளயப்பட்டாக விளங்கியது. அப்பாளையப் பட்டினை நிர்வகித்து வந்த அரண்மனைக்கு தெற்கே திருமூர்த்தி மலையில் எழுந்தருளி உள்ளதால் இவ்விறைவனை பாமர மக்கள் தெற்கு சாமி என்றும் போற்றி வழிபடுகின்றனர். திருமூர்த்தம் என்றால் ஆக்குதல், காத்தல், அழித்தல் என்ற முத்தெய்வங்களையும் குறிக்கும். இம்முத்தொழில் புரிய மூவரும் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஒப்பற்ற திருத்தலமே திருமூர்த்திமலையாகும்.