இ்த்திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும் இத்திருக்கோயில் ஆற்றங்கரையின் ஓரத்தில் அமைந்த திருக்கோயிலாகும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உடுமலைப்பேட்டை வட்டத்தில் அதிக அளவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு திருமூர்த்தி, கஞ்சிமலையப்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படுவதிலிருந்து இத்தலத்தின் பெருமையை அறியலாம். இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க இத்திருக்கோயில் உடுமலைப்பேட்டைக்குத் தெற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் பழனி என்னும் திருவாவினன்குடி திருத்தலத்திலிருந்து தென்மேற்கு 45 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆனைமலைத் தொடர்ச்சியில் அழகுற அமைந்துள்ளது. இயற்கை அன்னை எழில் நடனம் புரியும் மேற்குத்தொடர்ச்சி மலைச் சாரலில் தோன்றி சலசலத்து ஓடிவரும் தோணிநதி என்னும் பாலாற்றங்கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள ஒரு குன்றில் அருங்காட்சியளிக்கிறார்கள். திருமூர்த்திகளான...