அருள்மிகு நாட்ராயசுவாமி திருக்கோயில், வெள்ளகோவில், Kangayam - 638111, திருப்பூர் .
Arulmigu Nattarayaswamy Temple, Vellakovil, Kangayam - 638111, Tiruppur District [TM010061]
×
Temple History
தல வரலாறு
தமிழ் நாடு அரசு
இந்து சமயஅறநிலையத்துறை
அருள்மிகு நாட்ராயசுவாமி திருக்கோயில்
மேட்டுப்பாளையம்,
வெள்ளகோவில், காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
010061
கோயில் வரலாறு
தல பெருமை
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில், மேட்டுப்பாளையம், கிராமத்தில் பிரசித்தி பெற்ற நாட்ராயசுவாமி நாச்சிமுத்துஅய்யன் கோயில் உள்ளது. ஈரோடு வெள்ளகோவில் சாலையில் மாந்தபுரத்தின் கிழக்குப் பகுதியில் 1 கி.மீ தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் முன்னொரு காலத்தில் பத்மாசூரன் என்றொரு அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிவ பக்தன் ஆவான். அவன் சிவபெருமானை நினைத்து தவம் புரிந்தான். அசுரனின் கடுந்தவத்தினால் சிவபெருமான் அசுரனை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, அதற்கு அசுரன் நான் எனது கரங்களை யாருடைய தலையில் வைத்தாலும் அவர்கள்...தமிழ் நாடு அரசு
இந்து சமயஅறநிலையத்துறை
அருள்மிகு நாட்ராயசுவாமி திருக்கோயில்
மேட்டுப்பாளையம்,
வெள்ளகோவில், காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
010061
கோயில் வரலாறு
தல பெருமை
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில், மேட்டுப்பாளையம், கிராமத்தில் பிரசித்தி பெற்ற நாட்ராயசுவாமி நாச்சிமுத்துஅய்யன் கோயில் உள்ளது. ஈரோடு வெள்ளகோவில் சாலையில் மாந்தபுரத்தின் கிழக்குப் பகுதியில் 1 கி.மீ தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் முன்னொரு காலத்தில் பத்மாசூரன் என்றொரு அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிவ பக்தன் ஆவான். அவன் சிவபெருமானை நினைத்து தவம் புரிந்தான். அசுரனின் கடுந்தவத்தினால் சிவபெருமான் அசுரனை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, அதற்கு அசுரன் நான் எனது கரங்களை யாருடைய தலையில் வைத்தாலும் அவர்கள் அப்போதே எரிந்து சாம்பலாகக் கூடிய வரம் எனக்கருள வேண்டும் என்று வேண்டி அவ்வரத்தினை பெற்றான். அசுரன் உடனே வரத்தினை சோதிக்க எண்ணி, இநைவனின் திருச்சிரசில் தன் கரத்தினை வைக்க முயற்சி செய்தான். அசுரனது பக்தியில் மெய் மறந்து தவறுதலாக வரத்தினை கொடுத்து விட்டோமே என்று உணர்ந்த ஈசன், அவ்வசுரனிடமிருந்து தப்ப மண்ணானர், மருவானார், மலையானார், கடலானார், நதியானார் மற்றும் பலவிதமாக உருவமாககி ஐவிரளிச் செடியாகி ஆயிரக்கணக்கான பழங்களுடன் காட்சியித்தார். ஈசனை தொடர்ந்து வந்த அசுரன் இறுதியாக ஆயிரக்கணக்கான பழங்களுடன் அழகான ஐவிரளிச் செடியாக காட்சியளித்த இறைவனை கண்டு மதங்கொண்ட ஆட்டுக்கடா ரூபமாகி இதனை மென்றே தீர்ப்பேன் என்று சூளுரைத்து மென்று தின்ன தொடங்கினான்.
இதனை கண்ட அன்னை பரமேஸ்வரி துயர் மிகுதிகொண்டு தனது தலைவரது கையறுநிலை கண்டு கலங்கி, தனது தமையனான பெருமானை அணுகி தலைவனை காத்தருளுமாறு வேண்டினார். தமையனும் தங்கையின் துயர்களைய சிவபெருமானைத் தேடி, மாற்று உருக்கொண்டு ஐவிரளிச்செடியாக அவர் காட்சியளித்ததையும், மதங்கொண்ட ஆடு ரூபத்தில் அதனை மென்று தின்று கொண்டிருந்த அசுரனையும் கண்டார். அப்போது தெய்வ ரம்பை வடிவம் கொண்டு பேரழகுடன் அங்கு திருமால் தோன்றினார் அதில் மயங்கிய அசுரன் திருமாலை தொட முயன்றான் அதற்கு அந்த அழகு தேவதை இவ்வளவு அருவருப்பாக உள்ள நீ எப்படி என்னை தீண்டலாம்? முதலில் நன்றாக குளித்து விட்டு சுத்தமாக வரவும் என்று கூற, அசுரன் மயங்கி தண்ணீர் தேட முயன்றான். ஆனால் மாயனோ மாயம் செய்து பூமிகளில் தண்ணீரே இல்லாமல் செய்ய, இறுதியில் அருகில் உள்ள பாறையின் சிறிய பள்ளத்தில் பசுமாடு பெய்த கோமயம் சிறிதளவு இருக்க செய்தார். அதில் சுத்தம் செய்யுமாறு தேவதை கூற அசுரன் மதி மயங்கி, தன்னிலை தடுமாறி கோமயத்தை கைவைத்து நனைத்து தனது தலையில் வைக்க எரிந்து சாம்பலாகி போனான்.
இச்சம்பவத்தை அறியாத சிவபெருமான் அந்த பேரழகு அழைக்க தன் சுய ரூபம் கொண்டு அந்த பேரழகைக் கண்டு தன்னிலை மறந்து அணைக்க உணாச்சி வசப்பட்ட இருவரது விந்துக்கள் பெருகி வர அதனை இருகரங்களிலும் பிடித்து ஒன்று உறரி என்றும் மற்றொன்று உறரன் என்றும் பெயரிட்டு இரு குழந்தைகளாக உருப்பெறச் செய்தார்கள். முதலில் உறரி உறரன் திருக்கோயில் என்று அழைக்கப்பட்டு இறுதியாக நாட்டராயன் நாச்சிமுத்துஅய்யன் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கதையில் வரும் கோமயம் உள்ள பள்ளம் இன்றும் புனிதமான பாலியாக விளங்குகிறது. பிறகு மக்கள் அருள்மிகு நாட்டராயசுவாமி மற்றும் நாச்சிமுத்துஅய்யன் சுவாமிக்கு கோவில் கட்டி வழிபடத் தொடங்கினார்கள். மேலும் பக்தர்கள் வேண்டியதை அருளி பாதுகாத்து வந்தனர். அந்த சமயத்தில் மகாமுனி என்ற தேவதை நரமாமிசம் வேண்டி அங்குள்ள மக்களை துன்புறுதிதி வந்தது. அவ்வூர் மக்கள் அருள்மிகு நாட்டராயன் மற்றும் நாச்சிமுத்துஅய்யன் ஆகிய இருவர்களிடம் வந்து முறையிட்டனர். உடனே படைபலத்துடன் சென்று மகாமுனியை அடக்கி இழுத்து வந்து தன் முன்னிலையில் வைத்துக் கொண்டனர். இவ்வாறு மக்களைக் காத்தருளிய காரணத்தினால் கேரள நாட்டு மக்கள் இன்றும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அருள்மிகு நாட்டராயசுவாமி மற்றும் நாச்சிமுத்துஅய்யன் சுவாமிக்கு காவல் தெய்வங்களாக அருள்மிகு கருப்பண்ணசுவாமியும், அருள்மிகு மண்டி மகாமுனியும் அருள் சுரக்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
உபசன்னதிகள்
அருள்மிகு மகாமுனியம்மன் சன்னதி
உபசன்னதி பெயர் அருள்மிகு மகாமுனியம்மன் சன்னதி
விமானம் வகை சோலா விமானம்
கருவறை வடிவம் சதுர வடிவம்
சிறப்பு பிரார்த்தனை
உபசன்னதி விபரம் அருள்மிகு நாட்ராயன்சுவாமி மற்றும் நாச்சிமுத்துஅய்யன் சுவாமி வெளிப்பிரகாரத்தில் அருள்மிகு மகாமுனியம்மன் திருக்கோயில் தனி சன்னதியாக உள்ளது. சேவார்த்திகள் அருள்மிகு நாட்ராயன்சுவாமி மற்றும் நாச்சிமுத்துஅய்யன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே அருள்மிகு மகாமுனியம்மன் திருக்கோயிலில் வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அருள்மிகு கருப்பண்ணசுவாமி திருக்கோயில்
உபசன்னதி பெயர் அருள்மிகு கருப்பண்ணசுவாமி சன்னதி
விமானம் வகை சோலா விமானம்
கருவறை வடிவம் சதுர வடிவம்
சிறப்பு பிரார்த்தனை
உபசன்னதி விபரம் அருள்மிகு நாட்ராயன்சுவாமி மற்றும் நாச்சிமுத்துஅய்யன் சுவாமி வெளிப்பிரகாரத்தில் அருள்மிகு கருப்பண்ணசுவாமி திருக்கோயில் தனி சன்னதியாக உள்ளது. சேவார்த்திகள் அருள்மிகு நாட்ராயன்சுவாமி மற்றும் நாச்சிமுத்துஅய்யன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே அருள்மிகு மகாமுனியம்மன் திருக்கோயிலில் வழிபட்டுவிட்டு இறுதியாக கருப்பண்ணசுவாமி சன்னதி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
குடிநீர் வசதி(ஆர்.ஓ)
வசதிகளின் எண்ணிக்கை 2
வசதி அமைவிடம் திருக்கோயிலுக்குள்ளே அருள்மிகு பேச்சியம்மன் சன்னதி அருகிலும் இன்னொரு திருக்கோயிலுக்கு வெளியே பக்தர்கள் இளைப்பாறும் மண்டபத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது.
வசதிகளின் விபரம் திருக்கோயிலுக்குச் சுவாமி கும்பிட்டு வெளியே பக்தர்கள் இளைப்பாறும் மண்டபத்தில் மேற்குப் புறதில் திருக்கோயில் அலுவலக வடக்குப்புறத்திலும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
முடிகாணிக்கை வசதி
வசதிகளின் எண்ணிக்கை 1
வசதி அமைவிடம் அருள்மிகு கருப்பண்ணசுவாமி திருக்கோயில் எதிர்புறம்
வசதிகளின் விபரம் முடிக்காணிக்கை மண்டபம் அருள்மிகு கருப்பண்ணசுவாமி திருக்கோயில் எதிர்புறமும் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை குளியலறை அருகில் அமைந்துள்ளது. முடிக்காணிக்கை மண்டபத்தில் இரு குளியலறையும் ஆடை மாற்றும் அறை ஒன்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நான்கு குளியலறை மற்றும் ஆடை மாற்றும் அறை 2ம் உள்ளது.
கழிவறை வசதி
வசதிகளின் எண்ணிக்கை 6
வசதிகளின் அமைவிடம் முடிக்காணிக்கை மண்டபம் அருகில்
வசதிகளின் விபரம் முடிக்காணிக்கை மண்டபம் அருகில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மூன்று கழிவறை உள்ளது.
குளியலறை வசதி
வசதிகளின் எண்ணிக்கை 6
வசதிகளின் அமைவிடம் முடிக்காணிக்கை மண்டபம் அருகில்
வசதிகளின் விபரம் முடிக்காணிக்கை மண்டபம் அருகில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மூன்று குளியலறை உள்ளது.
நிர்வாக அலுவலர்
திருமதி.இர. திலகவதி,
செயல் அலுவலர் நிலை
அருள்மிகு நாட்டராயசுவாமி திருக்கோயில், மேட்டுப்பாளையம், வெள்ளகோவில்
தொலைபேசி எண்: 04257-299744
மின்னஞ்சல் : @.