அருள்மிகு வெங்கடேசபெருமாள் திருக்கோயில், மொண்டிபாளையம்,, அவிநாசி - 641655, திருப்பூர் .
Arulmigu Venkatesa Perumal Temple, Mondipalayam, Alathur Village, Alathur - 641655, Tiruppur District [TM010062]
×
Temple History
தல பெருமை
திருப்பதி மலைக்கு சென்னை நகரிலிருந்து அநேக பரம பாகவதர்கள் வந்து தீர்த்த தலங்களில் ஸ்நானம் செய்து, அத்திருவேங்கடத் தானைச் சேவை புரிந்து காணிக்கை செலுத்துமளவில் அவர்களில் ஒருவருக்கு ஆவேசம் உண்டாகி அவர் கூறியதாவது “இப்பர்வதமானது தென் மேற்காக கேரள தேசம் வரையும் இருக்கின்றது. மத்தியில் நீலகிரி என்னும் ஒரு பர்வதம் உண்டு. அதன் நேர் தென்புறமுள்ள பவானி ஆற்றுக்கும் நேர் தெற்கு இருபது மலை தூரத்தில் மேல் புறத்தில் ஏழு மேடுகள் உண்டாகியிருக்கின்ற ஒரு இடத்தில் நான் அவதரிக்கப் போகிறேன்” என்று சொன்னார்.
சிறிது நாளைக்குப் பின் ஆலத்தூர் என்னும் கிராமத்தில் கம்மவார் குலம் மேதலமிட்டார் என்னும் குலத்தில் மாதவநாயக்கருக்கு கொண்டம நாயக்கர் என்னும் மகன் பிறந்தார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த அவர் தனது...திருப்பதி மலைக்கு சென்னை நகரிலிருந்து அநேக பரம பாகவதர்கள் வந்து தீர்த்த தலங்களில் ஸ்நானம் செய்து, அத்திருவேங்கடத் தானைச் சேவை புரிந்து காணிக்கை செலுத்துமளவில் அவர்களில் ஒருவருக்கு ஆவேசம் உண்டாகி அவர் கூறியதாவது “இப்பர்வதமானது தென் மேற்காக கேரள தேசம் வரையும் இருக்கின்றது. மத்தியில் நீலகிரி என்னும் ஒரு பர்வதம் உண்டு. அதன் நேர் தென்புறமுள்ள பவானி ஆற்றுக்கும் நேர் தெற்கு இருபது மலை தூரத்தில் மேல் புறத்தில் ஏழு மேடுகள் உண்டாகியிருக்கின்ற ஒரு இடத்தில் நான் அவதரிக்கப் போகிறேன்” என்று சொன்னார்.
சிறிது நாளைக்குப் பின் ஆலத்தூர் என்னும் கிராமத்தில் கம்மவார் குலம் மேதலமிட்டார் என்னும் குலத்தில் மாதவநாயக்கருக்கு கொண்டம நாயக்கர் என்னும் மகன் பிறந்தார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த அவர் தனது பதினாறாம் வயதில் குன்றின் மீது ஏறி கீழே குதிப்பதும் மனத்திற்கு தோன்றியவாறு தெய்வங்களை ஸ்தோத்தரித்தும் இருப்பதை இவருடைய தாய் தந்தை முதலான யாவரும் பார்த்து தெய்வமோ, பூதமோ, ஒருவர் செய்வினை குணமோ என்று சந்தேகமுற்று ஒரு நாள் காலையில் இவர் இருக்கும் பசுக்கொண்டகை அருகில் நின்று நான்கு சுமை புளியம் விறகுகளை நெருப்பிலிட்டு கொளுத்தி, வெந்தபின்பு, ஒரு வாழை இலையை அறுத்து கிணற்றிலுள்ள தண்ணீரின் மீது விரித்து வாழை இலையின் பேரில் எடுத்து கொண்டு போய் கொட்டி, கைகளினால் அந்நெருப்பைப் பரப்பி விட்டு மட்டம் செய்து, அதன் மீது உட்கார்ந்து திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து ஸ்கோத்திரம் செய்து கொண்டும்-மூன்று தினம் இம்முறைப்படி செய்து கொண்டு வந்தார். இவ்வற்புதத்தை அக்கம் பக்கத்திலுள்ள கிராமத்தார் அநேக ஜனங்கள் வந்ழ கூடி, இவரைப் பார்த்து சேவித்து, ”நீர் தெய்வமேயொழிய வேறொன்று மில்லாதவரானதால், தாங்கள் ஒரு இடத்தை காட்டினால் அவ்விடத்தில் ஓர் விக்கிரகத்தை வைத்து பூஜை புரிந்து வருகிறோம்” என்று எல்லோரும் இவரைக் கேட்டுக் கொண்டனர். அங்கு வந்து நிறைந்த மகா ஜனங்களைப் பார்வையுற்று, இவர் மேலெழுந்து “நான் திருப்பதியின் கண் எழுந்தருளியிராநின்ற திருப்பதி வெங்கடாஜலமூர்த்தியாகும். இங்குள்ள சகல பிரஜைகளும் அடுத்த புதன்கிழமை சாயரட்சை வருவீர்களாகில் என்னுடைய அவதாரத்தை உங்களுக்குக் காட்டுக்கிறேன்” என்றார். அதை கேட்டு யாவரும் அந்த உத்தரவுப்படி, அடுத்த புதன்கிழமை தினம் அவ்வூருக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது மாட்டுக் கொட்டகையில் சயனித்துக் கொண்டிருந்தவர் எப்பொழுது எழுந்து வருவாரோ என்று காத்துக் கொண்டிருந்தனர். உடனே இவர் எழுந்து, நான்கு ஒட்டர்களை அழைத்துக் கொண்டு, இச்சனங்களுடனும், தீவட்டிகளுடனும், இவ்வூருக்கு ஒன்றரை மையில் தூரத்தில் உள்ள மொண்டிபாளையத்திற்கும், ஆலத்தூருக்கும் மத்திய எல்லைக்குச் சென்று நான்கு முழுங்காளக சதுரமாக ஒரு கோடு குறித்து அங்குள்ள மண்னை அப்புறத்தப்படுத்தச் செய்தார். அது மூன்று அல்லது நான்கு முழுங்களாயிற்று. ஒட்டர்களை மேலே வரும்படி கூறிவிட்டு, ஸ்ரீமன் நாராயணமூர்த்தியை நினைத்து அக்குழியை நான்குதரம் வலம் வந்து “திருவேங்கடத்தானே! நீர் நிறைந்த கார்மேகம் போன்ற திருமேனியை உடையவரே! தாங்கள் அமராபுரியில் தேவேந்திர மகாராஜன் கொலுவை விட்டு இறங்குவதைப் போலவும், தாங்கள் நீலகிரி பர்வதத்தை விட்டிறங்கி இங்கு அவதாரம் புரிய வேண்டும்” என்றும் பலவாறாக ஸ்கோத்திரம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில், நீலகிரி வடக்கிலுள்ள பர்வதத்தில் 24 தீவட்டிகளாகிய பந்தங்கள் முழுங்கிக் கொண்டு, அதிக சீக்கிரத்தில் இக்குழியில் ஐக்கியமாயின. உடனே அவர் அக்குழியில் இறங்கி, கொந்தாளத்தை கையில் எடுத்து “நாராயண! கோவிந்தா! மாதவா!” என்று சொல்லி, கையிலுள்ள கொந்தாளத்தினால் குண்டாக இருந்த ஓர் பாறையின் மீது ஓங்கி அடித்தார். பாறை இரண்டாக பிளந்தது. பின் அப்பாறையை அப்புறப்படுத்தி, கீழ் பார்க்கும் போது மற்றொரு குழி அங்கு காணப்பட்டது. அக்குழியில் பூமணல்கள் நிறைந்திருந்தன. அம்மணலை கையில் மெதுவாகத் தள்ளிப் பார்க்கையில் முன்பு தேவர்களால் பூசிக்கப் பெற்ற இப்போது அந்த ஸ்தலத்தில் வசிக்கா நின்ற சாலக்கிராமும் ஓர் சங்கும், தாமிரக்கிண்ணமும் இருந்தன. இவைகளை எடுத்து இக்குழிக்கு வடக்கின் கண்ணுள்ள ஊஞ்ச மரத்தின் கீழ் மணலைக் கொட்டி, பனை மட்டைகளினால் குடிசைக் கட்டி, பர்ணசாலை அமைத்து இந்த சாலக்கிராமத்தை வைத்து நாள்தோறும் கொண்டம நாயக்கர் பூஜித்து வந்தார். இதன் காலம் கலியுக சாகப்தம் 4813ம் வருடம் நந்தன ஆண்டு ஐப்பசி மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை இரவு 24 நாழிகை அளவில் ரோகிணி நட்சத்திரமும் அமர பட்சம் மொண்டிபாளையம் வெங்கிடரமணசுவாமி அவதரித்தார்.