Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொண்டத்துகாளியம்மன் மற்றும் உத்தமலிங்கேஸ்வரர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், பெருமாநல்லூர் - 641666, திருப்பூர் .
Arulmigu Kondathukaliamman And Uththamalingeswarar Adhikesavaperumal Temple, Perumanallur - 641666, Tiruppur District [TM010063]
×
Temple History

தல பெருமை

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. பெருமாநல்லூரின் வடமேற்குப் பகுதியில் வடக்கு நோக்கி இந்தக் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியை சேரமன்னர்கள் ஆண்டபோது போரில் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய குருநாதர் போரில் வெல்ல படைபலம் மட்டுமின்றி காளியின் அருள்பலமும் வேண்டும் எனக் கூறி அவளுக்கு கோயில் அமைத்து களப்பலி கொடுத்துப் போருக்குச் சென்றால் எளிதில் வெல்லலாம் என்றார். அதன்படி மன்னர்கள் இவ்விடத்தில் காளிதேவிக்கு தனியே கோயில் ஒன்றைக் கட்டினர். பின்பு அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லும் முன்பு காளியை வணங்கி பெரிய குண்டம் ஒன்றில் வேள்வி வளர்த்து அதில் வீரர்கள் குண்டம் இறங்கி செல்வதை வழக்கமாக...