Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், Udumalpettai, Udumalpettai - 642126, திருப்பூர் .
Arulmigu Prashanna Vinayagar Temple, Udumalpettai, Udumalpettai - 642126, Tiruppur District [TM010074]
×
Temple History

தல வரலாறு

ஏழைகளின் உதகை என ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்ட உடுமலைப்பேட்டை நகரில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வறட்சியும், பஞ்சமும் ஏற்படவே மக்கள் ஊரை காலி செய்து புறப்படலாயினர். காசியிலிருந்து இந்நகருக்கு வருகை தந்த சிவனடியார் ஒருவர் மக்களைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறி இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்தார். விநாயகப் பெருமான் தாய், தந்தையருடன் மக்களுடன் கூடிய அந்த சிவனடியார் முன் பிரசன்னமாகி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஒளி வெள்ளமாய் காட்சி தந்து சங்கடங்களை தீர்க்கவே யாம் எழுந்தருளினோம். இனி ஒருபோதும் சங்கடங்கள் வராது சந்தோஷங்கள் பெருகவே அருளினோம். இவ்வாறு அருள்மிகு விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதருடன் விநாயகப் பெருமான் பிரசன்னமாகிய இடமே இத்திருத்தலமாகும். அன்றைய தினமே சங்கடகரசதுர்த்தி திருநாளாகும். இச்சிவனடியார் தலைமையில் விசாலாட்சி அம்மன்...

தல பெருமை

விநாயகப் பெருமான் தாய், தந்தையருடன் மக்களுடன் கூடிய அந்த சிவனடியார் முன் பிரசன்னமாகி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஒளி வெள்ளமாய் காட்சி தந்து சங்கடங்களை தீர்க்கவே யாம் எழுந்தருளினோம். இனி ஒருபோதும் சங்கடங்கள் வராது சந்தோஷங்கள் பெருகவே அருளினோம். இவ்வாறு அருள்மிகு விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதருடன் விநாயகப் பெருமான் பிரசன்னமாகிய இடமே இத்திருத்தலமாகும்.