தல வரலாறு
புராண பெருமை வாய்ந்த இப்பிரபஞ்சத்தில் மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் எனும் பெருமை பெற்று ஆன்பொருனை எனும் அமராவதி நதியின் வளத்தால் சிறந்து விளங்கும் சீர்மிகு கொங்கு திருமண்டலத்தில் திருமூலர் எனும் சித்தரால் திருமூலனுhர் என்று புகழ் பெற்று விளங்கி வரும் மூலனுhரில் அருள்மிகு வஞ்சியம்மன் என்ற திருநாமத்துடன் அவதரித்து கொங்குசேரலான், பூசன், கொங்கு செட்டியார், கம்பளத்தார், சீராளர் ஆகிய குலங்களுக்கு குலதெய்வதாகவும், வழிபடும் எண்ணிலடங்கா பக்தர்களுக்கு இஷ்ட தெய்வமாகவும் 27 நட்சத்திரங்களில் உத்திர நட்சத்திரத்தின் புண்ணிய ஸ்தலமாகவும் மற்றும் சித்தர்கள் ரிஷிகள் அருள்மிகு வஞ்சியம்மனை பூஜித்து வழிபட்டு அஷ்டமா சித்திகளை பெற்றதால் தக்ஷிணகைலாயமென்றும் செவிவழி செய்தியாக ஸ்தல புராணங்கள் கூறுகின்றது.