அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், Velliyampathi, Uthukkuli - 638103, திருப்பூர் .
Arulmigu Bathrakaliyamman Temple, Velliyampathi, Uthukkuli - 638103, Tiruppur District [TM010091]
×
Temple History
தல வரலாறு
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் அருகில் ஆதியூர் வெள்ளியம்பதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் அருளும் முப்பெரும் தேவியரும் ஒரே சன்னதியில் ஓருருவாகிப் பத்ரகாளியாக வீற்றிருப்பதும், மண்ணாலான மூன்று அருவுருவங்களாய்த் தனித்தனியே வீற்றிருப்பதும் தமிழகத்தில் வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். சிரசில் அக்கினிச் சுவாலையுடன், வலது காலை மடித்துப் பீடத்தில் இருத்தியவாறு, இடது காலைத் தொங்கவிட்டு மஹிசாசுரன் மீது ஊன்றியவளாய், வலது மேல் கரத்தில் ஏந்திய திரிசூலத்தை மஹிசாசுரன் மீது ஊன்றியவளாய், மற்ற கரங்களில் உடுக்கை, வாள், அசுரசிரசு, எரியகல், கேடயம், மணி, கபால பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியவளாய் உருவம் கொண்டு, வீராசனத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து தன்னை நாடி வரும்...திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் அருகில் ஆதியூர் வெள்ளியம்பதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் அருளும் முப்பெரும் தேவியரும் ஒரே சன்னதியில் ஓருருவாகிப் பத்ரகாளியாக வீற்றிருப்பதும், மண்ணாலான மூன்று அருவுருவங்களாய்த் தனித்தனியே வீற்றிருப்பதும் தமிழகத்தில் வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். சிரசில் அக்கினிச் சுவாலையுடன், வலது காலை மடித்துப் பீடத்தில் இருத்தியவாறு, இடது காலைத் தொங்கவிட்டு மஹிசாசுரன் மீது ஊன்றியவளாய், வலது மேல் கரத்தில் ஏந்திய திரிசூலத்தை மஹிசாசுரன் மீது ஊன்றியவளாய், மற்ற கரங்களில் உடுக்கை, வாள், அசுரசிரசு, எரியகல், கேடயம், மணி, கபால பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியவளாய் உருவம் கொண்டு, வீராசனத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி அருள்புரிந்து வருகிறாள் பத்ரகாளியம்மை.
அடுத்துள்ள சன்னதியில் கொண்டத்துக்காளி வடக்கு நோக்கியவளாக எட்டுத் திருக்கரங்களுடன் வீராசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இத்தலத்தின் காவல் தெய்வமாகிய முரசன் சுவாமி உயரமான சுதை உருவத்தில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் தென்மேற்கு மூலையில் அரசும், வேம்பும் அருகிருக்கக் காட்சியளிக்கும் கன்னிமூலை விநாயகர் பல்வேறு தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
வடக்கு நோக்கிய வரசித்தி விநாயகர், அம்மையின் ஆணையை ஏற்று நடத்தும் ஆணைத் தம்பிரான் சுவாமி, அய்யனார், சப்பாணி நாயனார் (சப்பணமிட்டு அமர்ந்த கோலத்தில் உள்ள ஏனாதிநாத நாயனார்), கொன்னவேல் பெருமாள் (கூர்வேல் கொடுந்தொழிலன் என்று ஆண்டாள் நந்தகோபனைச் சிறப்பித்தவாறே, துவாரகையில் அரசாண்ட அவன் மைந்தனாகிய கண்ணனுக்கும் கொன்றவேல்பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டு அது மருவியுள்ளது), பாண்டியராஜன், கன்னிமார், நாகர், பேச்சியம்மன், வேட்டைக்காரன் சுவாமி (முரசன் சுவாமிக்கு வேட்டைத்துணையாய் இருப்பவர்) ஆகியோர் மற்ற பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
வருடந்தோறும் ஆவணி மாதம் குண்டம் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அப்போது பெருந்திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
மேலும் திருப்பூர், ஈரோடு மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள வேண்டுதல்காரர்கள் இத்திருவிழாவின்போது முரசன் சுவாமிக்கு நீளமான தரம்வாய்ந்த பீஸ் துணிகளை அங்கவஸ்திரம் போல் அணிவித்து நேர்த்திக்கடன் செய்வதும் வழக்கம்.
கார்த்திகைத் திருநாளன்றும், நவராத்திரி நாட்களிலும், ஆடி வெள்ளிக் கிழமைகளிலும், இதர விசேட நாட்களிலும் பெருந்திரளான பக்தர்கள் அம்மனைத் தரிசிக்க வருகிறார்கள்.
மாதந்தோறும் அமாவாசை நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் நடைபெறுகின்ற வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னையின் அருள் பெறுகிறார்கள். அப்போது மனநலம் குன்றியவர்கள் இங்கே வந்து பத்ரகாளியம்மனை வழிபட்டு நலம் பெறுகின்றனர்.
பத்ரகாளியம்மன் சன்னதிக்குப் பின்புறம் உள்ள பூச்சக்கொட்டை மரத்தின் துவாரத்தில் சர்ப்பங்கள் இருப்பதாகவும், அவை அன்றாடம் பத்ரகாளி அம்பிகையை வழிபட்டு வருவதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது.
ஆகவே சர்ப்பதோஷம் உள்ளவர்களும், சர்ப்ப கிரகங்களான ராகு கேது தோஷம் உள்ளவர்களும் இத்தலத்தில் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் நடைபெறும் பால் பூசையில் ஐந்து வாரங்களுக்குக் குறையாமல் கலந்துகொண்டு, துர்க்கையாய், மஹிசாசுரமர்த்தினியாய் உள்ள பத்ரகாளி அம்பிகையை விளக்கேற்றி அபிஷேகம் செய்து வழிபட்டு நற்பலன்களை அடைகிறார்கள். அதேபோல வெள்ளிக்கிழமைகளிலும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தியின்பொருட்டும், பிற வேண்டுதல்களின்பொருட்டும் திரளான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
தினந்தோறும் காலை 6 மணிக்குக் காலசந்தி பூசையும், மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூசையும் நடைபெறுகின்றன. அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. உள்ளூர் வழக்கங்களின்படியே மேற்படியான பூசைகள் அனைத்தும் நடைபெறுகின்றன.
அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக
தல பெருமை

புராண பின்புலம்