அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், Kadathur, Madathukkulam - 642203, திருப்பூர் .
Arulmigu Archuneshwarar Temple, Kadathur, Kadahur - 642203, Tiruppur District [TM010097]
×
Temple History
தல வரலாறு
அமராவதி நதிக்கரையில் சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 11 சிவாயலங்யகளில் அமராவதி நதிக்கரையில் சிவபெருமானின் திருவருளால், சுயம்பு லிங்கமாக தோன்றி விக்ரம சோழ மன்னனை ஆட்கொண்டு, அவரால் சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மானிக்கப்பட்ட வரலாற்று தொன்மையும், பாரம்பரியமும் வாய்ந்த திருக்கோயிலாகும். மூலவர் சுவாமி அளவில் பெரியதாகவும், பெரிய ஆவுடையாரைக் கொண்டும், சுயம்பு லிங்கத் திருமேனியும் கொண்டு அருள்பாலிப்பது இத்திருக்கோயில் மட்டுமே என்பது முக்கிய சிறப்பு அம்சமாகும். உத்ராயணம், தட்சணாயணம் காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் அமராவதி நதியில் பட்டு பின் சுயம்பு லிங்கத்திருமேனியுடைய அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் சுவாமி மீது பிரதிபலிக்கும் வண்ணம் இத்திருக்கோயில் கட்டியிருப்பது சோழர் கால கட்டடக் கலைக்கு ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அம்பாள் மூலவருக்கு...அமராவதி நதிக்கரையில் சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 11 சிவாயலங்யகளில் அமராவதி நதிக்கரையில் சிவபெருமானின் திருவருளால், சுயம்பு லிங்கமாக தோன்றி விக்ரம சோழ மன்னனை ஆட்கொண்டு, அவரால் சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மானிக்கப்பட்ட வரலாற்று தொன்மையும், பாரம்பரியமும் வாய்ந்த திருக்கோயிலாகும். மூலவர் சுவாமி அளவில் பெரியதாகவும், பெரிய ஆவுடையாரைக் கொண்டும், சுயம்பு லிங்கத் திருமேனியும் கொண்டு அருள்பாலிப்பது இத்திருக்கோயில் மட்டுமே என்பது முக்கிய சிறப்பு அம்சமாகும். உத்ராயணம், தட்சணாயணம் காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் அமராவதி நதியில் பட்டு பின் சுயம்பு லிங்கத்திருமேனியுடைய அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் சுவாமி மீது பிரதிபலிக்கும் வண்ணம் இத்திருக்கோயில் கட்டியிருப்பது சோழர் கால கட்டடக் கலைக்கு ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அம்பாள் மூலவருக்கு வலது பக்கம் தனிசன்னதி கொண்டு அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். மருத மரம் தலவிருட்ச மரமாகும்.