Screen Reader Access     A-AA+
அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், Madathukulam - 642203, திருப்பூர் .
Arulmigu Azhagunachiamman Temple, Madathukulam - 642203, Tiruppur District [TM010098]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலில் மூலவர் அழகுநாச்சியம்மன் என்னும் திருப்பெயரில் விளங்கி வருகின்றது. ருத்ரகாளியாக, ஆங்கார சொரூபியான இந்த அம்மனை தனது தவசித்தியால் மகான் பச்சகந்தையதேவர் அவர்கள் இவ்வூரில் உள்ள அம்மை அழைக்கும் இடத்தில் இருந்து இந்த அம்மனின் ஆங்கார சொரூபத்தை அடக்கி அமராவதி ஆற்றோரம் உள்ள ஆனைக்கட்டிகெஜம் என்ற இடத்தில் அம்மனை உட்காரவைத்து காவலாக மதுரைவீரனை அமர்த்தியதாக கூறுகின்றனர். அன்றைய தினத்தில் இருந்து ஆங்கார சொரூபியான அம்மன் சாந்த சொரூபியாகி அழகுநாச்சியம்மன் என்னும் திருப்பெயரில் காட்சி தருகிறாள். இருந்தும் அம்மனின் காவல் தெய்வங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை படங்குனி உற்சவ விழா கொண்டாடப்பட்டு எருமைக்கிடாக்களை கோயிலில் வெட்டி சாந்தி செய்யப்பட்டு வருகின்றது. வழக்கமாக பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆட்டு கிடாய்களை வெட்டி வருகின்றனர்.

புராண பின்புலம்

அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ளது. அருகாமையிலுள்ள ஏராளமான பக்தர்கள் இந்த அம்மனை வெள்ளி மற்றும் செவ்வாய் நாட்களில் வணங்கி வருகின்றனர். .அம்மனின் கரங்கள் எல்லையில்லா வலிமையுள்ள தெய்வீக சக்திவாய்ந்த அடையாளமாக விளங்குகிறது. குறிப்பாக ஆடி வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் இந்த கோவிலில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கோயிலின் மிகப்பெரிய திருவிழா படங்குனி திருவிழா. இது தவிர, பிரதி வெள்ளிக்கிழமைகள், பிரதி அமாவாசை, ஆடி 18, தீபாவளி, மார்கழி தனூர் பூஜை, சித்திரைத் திருவிழா போன்ற அம்மனுக்கு உகந்த நாள்களில் வெகு சிறப்பாக அபிஷேகம்...