Screen Reader Access     A-AA+
அருள்மிகு அகஸ்தீஸ்வர சுவாமி திருக்கோயில், Near Amaravathi River, Dharapuram - 638656, திருப்பூர் .
Arulmigu Agathiswarar Temple, Near Amaravathi River, Dharapuram - 638656, Tiruppur District [TM010114]
×
Temple History

தல வரலாறு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் நகர் அமராவதி நதிகரையில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அமைந்த பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் அகஸ்தியரால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் என பெயர் உண்டாகக் காரணம் காசியிலிருந்து தேவர்களுடன் அகஸ்தியர் உலக சஞ்சாரம் செய்ய புறப்பட்டு வரும் பொழுது ஒவ்வொரு ஊர்களிலும் தங்கி காலைப் பொழுதில் சிவபூஜை செய்து முடித்த பின்பே பயணம் மேற்கொள்வார். அவ்வாறு பயணம் செய்கையில் தாராபுரம் அமராவதி நதியில் குளித்துவிட்டு சிவபூஜைக்காக சிவ லிங்கத்தை எடுத்துவைத்து பூஜிக்க தேவர்களை அழைத்து சிவலிங்கத்தை எடுத்தவர சொன்னபொழுது சிவ லிங்கத்தை காசியிலேயே வைத்துவிட்டு வந்து விட்டதாக கூறினர். உடனே. அவர்களை போய் காசியிலிருக்கும் சிவலிங்கத்தை...