தல வரலாறு

தாராபுரம் வட்டம் வீராட்சிமங்கலம் கிராமம் அருள்மிகு சந்திரசேகரா் வகையறா திருக்கோயில் சௌந்தரநாயகி தாயாரின் இடபக்கம் சந்திரசேகரரும் வலப்பக்கம் லட்சுமி நாராயணன் சுவாமியும் தனித்தனி சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு நடராஜர் சிவகாமி தாயார் சந்திரசேகரா் சௌந்தரநாயகியம்மையார் நா்த்தனா் கிருஷ்ணா் என ஐந்து உலோக சிலைகள் உள்ளது. முன்பு சிவராத்திரி பிரதோஷம் நவராத்திரி போன்ற காலங்களில் நான்கு மாட வீதிகளிலும் சுவாமி திருவீதி உலா வந்ததாக ஆன்மீக அன்பா்களால் தெரிவிக்கப்படுகிறது.இத்திருக்கோயில் காமிக மற்றும் பஞ்சாரத்திரம் ஆகமத்தின்படி பூசை முதலானவைகள் நடைபெற்று வருகிறது. குருக்கள் மற்றும் அய்யங்கார் இங்கு அா்ச்சகராக இருந்து வருகின்றனா். இத்திருக்கோயிலில் ஒரு கால பூசை நடைபெற்று வருகிறது.