அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், சென்னிமலை - 638051, ஈரோடு .
Arulmigu Subramaniyaswamy Temple, Malaikoil, Chennimalai - 638051, Erode District [TM010228]
×
Temple History
தல வரலாறு
சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெருநகரமாயும், ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இன்னும் பல சுவையான செய்திகள் அறிய ஆராய்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்நகரில் பண்ணையக்காரர் ஒருவருடைய பெரும் பண்ணையில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்து வந்திருக்கிறது. அதில் ஒரு வளம் மிக்க காராம்பசுவும் இருந்தது. தினம் பசுக்கள் மேய்ப்பவன் அடைத்து வைப்பது வழக்கம். சில நாட்களாக ஒரு காராம்பசுவின் மடியில் பால் இல்லாமல் இருந்து வந்ததை வேலையாள் தன் பண்ணையாரிடம் தெரிவித்தான். ...சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெருநகரமாயும், ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இன்னும் பல சுவையான செய்திகள் அறிய ஆராய்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்நகரில் பண்ணையக்காரர் ஒருவருடைய பெரும் பண்ணையில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்து வந்திருக்கிறது. அதில் ஒரு வளம் மிக்க காராம்பசுவும் இருந்தது. தினம் பசுக்கள் மேய்ப்பவன் அடைத்து வைப்பது வழக்கம். சில நாட்களாக ஒரு காராம்பசுவின் மடியில் பால் இல்லாமல் இருந்து வந்ததை வேலையாள் தன் பண்ணையாரிடம் தெரிவித்தான். பண்ணையாரும் பலநாட்கள் இதைக் கவனித்து வந்தபோது, தினசரி மாலையில் ஆவினங்கள் கூட்டாக தொட்டிக்கு திரும்பி வரும்போது காராம்பசு மட்டும் பிரிந்து சற்று தூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் மடியில் உள்ள பால் முழுவதும் தானாகவே சொறியவிட்டு பின் மறுபடியும் மாடுகள் கூட்டத்தில் சேர்ந்து வருவதை சில நாட்கள் கவனித்துவிட்டு, அந்தக் குறிப்பிட்ட இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்க்க செய்தார்.
சுமார் 5 அல்லது 6 அடி ஆழம் தோண்டியதும் எல்லோரும் அதிசயத்தக்க பூர்ண முகப் பொலிவுடன் ஒரு கற்சிலை தென்பட்டது. பண்ணையார் புளங்காகிதம் அடைந்து தன்னை ஆட்கொண்ட இறைவனே வந்து விட்டதாகக் கூறிக்கொண்டு விக்ரஹத்தை எடுத்து அதன் முகப் பொலிவில் ஈடுபட்டு மெய்மறந்திருந்தார்.
பின் விக்ரஹத்தை ஆராய்ந்தபோது விக்ரஹத்தின் இடுப்புவரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அதி அற்புத பொலிவுடனுமிருக்க இடுப்புக்கு கீழ், பாதம் வரை சரியான வேலைப்பாடில்லாமல் கரடு முரடாக இருப்பதை அவர் ஒரு குறையாக எண்ணி அந்த பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியினால் வேலை துவங்கும் சமயம் அந்த இடத்தில் இரத்தம் பீறிட்டது. இதைக் கண்ணுற்ற எல்லோரும் பயந்து போய் மேற்கொண்டு சுத்தம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.
பண்ணையார் தன் அபசாரத்திற்கு வருந்தி ஆண்டவர் இப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று மகிழ்ந்து பயபக்தியுடன் ஆராதனை செய்து பக்கத்திலுள்ள குன்றின்மேல் ஒரு சிறிய ஆலயம் எழுப்புவித்து இந்தச் சிலையை பிரதிஷ்டை செய்ததாயும், அதுவே சென்னிமலை மலையின் பேரில் தண்டாயுதபாணிமூர்த்தமாக ஆட்சிப் பீடத்தில் வீற்றிருப்பதாயும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதன் சான்றாக, அருள்மிகு தண்டபாணி மூர்த்தம் திருமுகம் பூரணப் பொலிவுடனும், இடுப்புக்குக் கீழ் திருப்பாதம் வரை வேலைப்பாடற்றும் இருப்பதை இன்றும் காணலாம்.
பழமை வாய்ந்த இத்திருக்கோயில் சிவாலயச் சோழர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இம்மன்னன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அனைத்து ஆலயங்களுக்கும் சென்று வரும் போது நொய்யல் ஆற்றின் கரையில் நீராடும் சமயம் இம்மலையினை கண்டு தனது படைகளுடன் மலைமேல் வந்து திருக்கோயிலினைக் கண்ணுற்றபோது முருகப் பெருமான் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளினார். சிவாலய சோழ மன்னர் திருக்கடவூரிலிருந்து தெய்வசிகாமணியார் என்ற திருமறையவரை இவ்வூருக்கு அருகில் உள்ள திருவிருந்தபுரம் (பிடாரியூர்) என்னும் இடத்தில் குடியேற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.
சிவமறையோர் குலத்தில் பிறந்து சத்திய ஞானியை குருவாக கொண்ட சரவண முனிவர் சென்னிமலையின் வரலாற்றை அறிய விரும்பி முருகக் கடவுளை வழிபட்ட சமயம் அசரீரி மூலம் முருகப் பெருமான் அருளியவாறு காஞ்சிபுரம் சென்று அங்கு வாழ் மறையவர்களிடம் செப்பேட்டிலிருந்து சிரகிரி வரலாற்றை வேறு செப்பேட்டில் எழுதிக் கொண்டு, சென்னிமலையில் செப்பேட்டில் உள்ளவாறு மகிமைகள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தார். முருகக்கடவுள் சரவண முனிவருக்கு ஆறுமுக வடிவமாகவும், ஒருமுக வடிவமாகவும் காட்சியருளினார். சரவண முனிவர் சமாதி இம்மலைமேல் உள்ளது.
தல பெருமை
தல புராணம் :
முன்னொரு காலத்தில் அனந்தன் என்ற நாகர்ஜூனனுக்கும், வாயு தேவனுக்கும் பலப்பரிட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பருவதத்தை சுற்றிப்பிடித்துக் கொள்ள வாயு தேவன் கடுமையாக வீசி அனந்தன் பிடியிலிருந்து மேரு மலையை விடுவிக்க முயன்றார். அதுபோழ்து மேருவின் சிகரப்பகுதி முறிந்து பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அச்சிகரப்பகுதியே சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி, சென்னிமலை என்றும் வழங்கலாயின.
தல வரலாறு:
சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெருநகரமாயும், ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இன்னும் பல சுவையான செய்திகள் அறிய ஆராய்ந்து வருவதாகவும்...தல புராணம் :
முன்னொரு காலத்தில் அனந்தன் என்ற நாகர்ஜூனனுக்கும், வாயு தேவனுக்கும் பலப்பரிட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பருவதத்தை சுற்றிப்பிடித்துக் கொள்ள வாயு தேவன் கடுமையாக வீசி அனந்தன் பிடியிலிருந்து மேரு மலையை விடுவிக்க முயன்றார். அதுபோழ்து மேருவின் சிகரப்பகுதி முறிந்து பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அச்சிகரப்பகுதியே சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி, சென்னிமலை என்றும் வழங்கலாயின.
தல வரலாறு:
சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெருநகரமாயும், ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இன்னும் பல சுவையான செய்திகள் அறிய ஆராய்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்நகரில் பண்ணையக்காரர் ஒருவருடைய பெரும் பண்ணையில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்து வந்திருக்கிறது. அதில் ஒரு வளம்மிக்க காராம்பசுவும் இருந்தது. தினமும் பசுக்கள் மேய்ப்பவன் அடைத்து வைப்பது வழக்கம். சில நாட்களாக காராம் பசுவின் மடியில் பால் இல்லாமல் இருந்து வந்ததை வேலையாள் தன் பண்ணையாரிடம் தெரிவித்தான். பண்ணையாரும் பலநாட்கள் இதை கவனித்து வந்தபோது, தினசரி மாலையில் ஆவினங்கள் கூட்டமாக தொட்டிக்கு திரும்பி வரும்போது காராம் பசு மட்டும் பிரிந்து சற்று தூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் மடியில் உள்ள பால் முழுவதும் தானாகவே சொறியவிட்டு பின் மறுபடியும் மாடுகள் கூட்டத்தில் சேர்ந்து வருவதை சில நாட்கள் கவனித்து விட்டு, அந்த குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டி பார்க்கச் செய்தார். சுமார் 5 அல்லது 6 அடி ஆழம் தோண்டியதும், எல்லோரும் அதிசயிக்கத்தக்க பூர்ண முகப்பொழிவுடன் ஒரு கற்சிலை தென்பட்டது. பண்ணையார் புளங்காகிதம் அடைந்து தன்னை ஆட்கொண்ட இறைவனே வந்து விட்டதாகக் கூறிக்கொண்டு விக்ரஹத்தை எடுத்து அதன் முகப்பொழிவில் ஈடுபட்டு மெய்மறந்திருந்தார். பின் விக்ரஹத்தை ஆராய்ந்தபோது விக்ரஹத்தின் இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் முகம் அதி அற்புதப் பொழிவுடன் இருக்க, இடுப்புக்குகீழ் பாதம் வரை சரியாக வேலைப்பாடில்லாமல் கரடுமுரடாக இருப்பதை அவர் ஒரு குறையாக எண்ணி அந்த பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியினால் வேலை துவங்கும் சமயம் அந்த இடத்தில் இரத்தம் பீறிட்டது. இதை கண்ணுற்ற எல்லோரும் பயந்து மேற்கொண்டு சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டார்கள்.
பண்ணையார் தன் அபசாரத்திற்கு வருந்தி ஆண்டவர் இப்படியே இருக்க பிரியப்படுகிறார் என்று மகிழ்ந்து பயபக்தியுடன் ஆராதனை செய்து பக்கத்திலுள்ள குன்றின்மேல் ஒரு சிறிய ஆலயம் எழுப்புவித்து இந்த சிலையை பிரதிஷ்டை செய்ததாயும், அதுவே சென்னிமலை மலையின் பேரில் தண்டாயுதபாணி மூர்த்தமாக ஆட்சிப் பீடத்தில் வீற்றிருப்பதாயும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனார்கள். அதன் சான்றாக அருள்மிகு தண்டாயுதபாணி மூர்த்தம் திருமுகம் பூரணப் பொழிவுடனும், இடுப்புக் கீழே வேலைப்பாடற்றும் இருப்பதை இன்றும் காணலாம்.