ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் சென்னிமலை திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருத்தலம் மலைக்கோயிலாகும். பக்தர்கள் எளிதில் செல்ல 1320 திருப்படிகள் கொண்ட படிவழி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை ஒன்றும் உள்ளது. படிவழியில் ஆங்காங்கே நிழல்தரும் மண்டபங்களும், குடிநீர் வசதியும், இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக படிவழியில் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் மூலவர் சன்னதிக்கு பின்புறம் அருள்மிகு வள்ளி, தெய்வானை சன்னதி தனியாகவும், இதற்கு பின்புறம் பின்நாக்கு சித்தர் சன்னதி தனியாகவும் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தென்புறம் அமைந்துள்ளது, தினசரி மூலவர்...
06:00 AM IST - 12:00 PM IST | |
12:00 PM IST - 08:30 PM IST | |
06:00 PM IST - 08:30 PM IST | |
தினசரி காலை 5.45 மணிக்கு கோபூஜை நடைபெற்ற பின்னர் காலை 6.00 மணிக்கு சன்னதி நடை திறக்கப்பட்டு பகல்வேளையில் நடை சாத்தப்படாமல் தங்குதடையின்றி இரவு 8,00 மணி வரை திறந்து வைக்கப்பட்டு 8.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வாரம் செவ்வாய்கிழமை நாட்களிலும், திருமணம் நடைபெறும் நாட்களிலும் அதிகாலை 4.45 மணிக்கு கோபூஜை நடத்தப்பட்டு சன்னதி நடை காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு வருகிறது. |