Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், Pariyur, Gobichettipalayam - 638476, ஈரோடு .
Arulmigu Kondathu Kaliamman Temple, Pariyur, Gobichettipalayam - 638476, Erode District [TM010229]
×
Temple History

தல பெருமை

கொங்கு நாட்டில் சிறந்தோங்கும் கோபிசெட்டிபாளையத்திற்கு அருகில் உள்ளள பாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் புகழ்பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருக்கோயில் பாரிவள்ளல் ஆண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அருகில் அமைந்துள்ளளதால் பாரியூர் எனப்பெயர் பெற்றது. இவ்வூருக்கு பராபுரி என்ற பெயர் அக்காலத்தில் வழங்கியதாக வரலாற்று நுரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பராபுரி என்ற சொல்லே பாரியூர் என மாறிவிட்டதாக அந்நுரலை எழுதிய காலடி எச்.சுப்பிரமணிய சாஸ்திரிகள் கூறியுள்ளார். பராபுரி என்ற சொல்லில் பரா என்பதற்கு போற்றுதல். வழிபடுதல் என்பதும் புரி என்ற சொல்லுக்கு கோட்டை மதில். ஊர் என்னும் பொருள்கள்உள்ளன. இவ்விரண்டையும் இணைத்து நோக்கின் வழிபடுவதற்கு உரிய கோயில் அல்லது பராவுவதற்கு உரிய ஊர் என பொருள் அமையும். கொங்கு நாட்டில் வாழ்ந்த கொடையாளர் பெருமைக்கு சான்றாக திகழ்ந்தவர்...

புராண பின்புலம்

ஈரோடு மாவட்டம். கோபிசெட்டிபாளையம் வட்டம். பாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருக்கோயில் பாரிவள்ளல் ஆண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளளதால் பாரியூர் என்ற பெயர் பெற்றதாக தெரிகிறது. இங்குள்ள அம்மனுக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்துவதால் கொண்டத்துக்காளியம்மன் என்ற பெயர் வரக் காரணமாகிறது. சிறிய அளவில் பழமையாக இருந்த இத்திருக்கோயில் 1942 ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பபட்டது. இத்திருக்கோயிலுக்கு கடைசியாக 26.4.2023 ல் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.