அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்.இத்திருக்கோயில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து அந்தியூர் செல்லும் பிரதான சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகிறார்கள். இத்திருக்கோயிலில் மார்கழி மாதம் கடைசி வியாழக்கிழமை நடைபெறும் குண்டம் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். இத்திருக்கோயிலில் பொது மக்கள் அம்மனிடம் வாக்கு கேட்டு தங்கள் இல்ல சுபகாரியங்கள். தொழில் ஆகியவற்றை செய்வது சிறப்பு அம்சமாகும்.
06:00 AM IST - 01:00 PM IST | |
04:00 PM IST - 08:00 PM IST | |
01:00 PM IST - 04:00 PM IST | |
சாதாரண நாட்களில் காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மற்றும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையும் நடை திறந்திருக்கும். பண்டிகை நாட்களில் காலை ஆறு மணி முதல் இரவுஎட்டு மணி வரை நடை திறந்திரு்ககு்ம. |