Screen Reader Access     A-AA+
அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், P.S.Park, Erode - 638001, ஈரோடு .
Arulmigu Periyamariamman Vagaiyara Temple, P.S.Park, Erode - 638001, Erode District [TM010233]
×
Temple History

தல வரலாறு

ஈரோட்டில் பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில் என மூன்று மாரியம்மன் திருக்கோயில்கள் உள்ளன. இங்கு பெரிய மாரியம்மன் வடக்கு முகமாகவும், மற்ற இரண்டு மாரியம்மன் கிழக்கு முகமாகவும் உள்ளது. ஈரோடு மாநகரின் முக்கிய பிரதான சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் கோட்டை பகுதியில் அமைந்துள்ளதால் கோட்டை மாரியம்மன் எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி வணங்கிய நிலையில் ஒரு பெண் அடியார் சிலை உள்ளது. சற்றுப்பின்னப்பட்ட சிலை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறது. மேற்கு பிரகாரப் பகுதியில் அமர்ந்த நிலையில் சுகாசனக் கோலத்தில் வலப்பக்கம் தாங்கிய கோடாரியுடன் (பரசு) பரசுராமன் உள்ளார். பரசுராமர் ரேணுகாதேவியின் (மாரியம்மன்) மகன் என்பதும், தந்தை சமதக்கினி முனிவர் என்பதும் புராணத்தால் அறியப்படும் செய்தியாகும். புராண...