Screen Reader Access     A-AA+
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், Thindal - 638012, ஈரோடு .
Arulmigu Velayuthasamy Temple, Thindal - 638012, Erode District [TM010234]
×
Temple History

தல வரலாறு

குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது ஆன்றோர் வாக்கு. கொங்கு நாட்டில் அங்காங்கே காணப்படும் குன்றுகளில், முருகப்பெருமான் பல்வேறு வடிவங்களில் எழுந்தருளி தன்னை வணங்கியோர்க்கு வற்றாத வளத்தையும், குன்றாத நலத்தையும், வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகின்றான். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேனுலவும் நாககிரி திண்டல்மலை எனப் புகழப்படும் இத்திருத்தலத்தில் முருகப்பெருமான், அருள்மிகு வேலாயுதசுவாமியாக காட்சி அளிக்கின்றார். திண்டல் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 200 அடி உயரத்தில் 2.43.5 ஹெக்டேர் பரப்பளவில் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார்...