தல பெருமை

முன்னொரு யுத்தில் இங்கு சிவபெருமானைச் சூரியன் வழிபட்டுப் பயனடைந்தார் என்று கூறுவர். அதன் நினைவாக சூரிய வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறுகின்றது. மாசி மாதம் இறுதி நாட்களில் எல்லா மண்டபங்களையும் கடந்து சூரிய ஒளி இறைவன் திருமுன்னர் செல்லுகிறது. அந்நாட்களில் சிறப்பாக இங்கு வழிபாடு நடத்தப்பெறும் துருவாசகர் இங்கு பள்ளிகொண்ட பெருமானைப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார் என்று கூறுவர். கயிலையிலிருந்து பொதியமலை சென்ற அகத்தியருக்குச் சிவபிரான் ஈரோட்டில் திருமணக் கோலத்தைக் காட்டினார் என்பது தலச் செய்தி.