Screen Reader Access     A-AA+
அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், Manikoondu, Erode - 638001, ஈரோடு .
Arulmigu Kongalamman Temple, Manikoondu, Erode - 638001, Erode District [TM010239]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு கொங்கலம்மனை 150 வருடங்களுக்கு முன் யாரோ தங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்ய அல்லது வேறு காரணத்திற்காகவோ கவர்ந்து சென்றனர். வண்டி ஆனங்கூர் அருகே வந்தபோது வண்டியின் அச்சுமுறிந்து விட்டது. முறிந்த அச்சை சரிசெய்து வண்டியை ஓட்ட முயன்ற போது கொங்கலம்மன் அருள்வாக்கால் ஆனங்கூரிலே எழுந்தருளிகிறேன் என்று கூறியவுடன் கவர்ந்து சென்றவர்கள் அம்மனை அங்கேயே போட்டு விட்டு வந்து விட்டனர். அந்த உள்ளூர் காணியாளர்களான கொங்கு வேளாளர்களின் கரியகுலம், கண்ணங்குலம், பனங்காடை குலம் சார்ந்த பெருமக்கள் கொங்கலம்மன் சிலையை பார்த்து மகிழ்ச்சி கொண்டு தங்கள் தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபட்டனர். பின்னாளில் கொங்கலம்மனுக்கு ஆனங்கூரில் தனிக்கோயில் கட்டப்பட்டது. ஈரோடு கொங்கலம்மன் பக்தர்களும், காணியாளர்களும் ஈரோட்டு கொங்கலம்மன் ஆனங்கூரில் இருப்பதாக கேள்விபட்டு ஆனங்கூர்...