வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈரோட்டில் நடுநாயகமான இடத்தில் அருள்மிகு கொங்கலம்மன் கோயில் அமைந்துள்ளது. நேதாஜி சாலையையும், ஆர்.கே.வி. சாலையையும் இணைக்கும் இடத்தில் மணிக்கூண்டுக்கு வடக்கு பக்கத்திலும், பெரிய மார்க்கெட்டுக்கு மேற்கு பகுதியிலும் கொங்கலம்மன் கோவில் வீதியில் கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அம்மன் கொங்கு குலத்திற்கான அம்மன் என்பதால் கொங்கலம்மன் எனப் பெயரிட்டு அழைத்து வணங்கப் பெறுகிறார். ஈரோடு நகரில் எந்த கோயில்களுக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு சென்றாலும் கொங்கலம்மனுக்கு முதல் தீர்த்தம் செலுத்திய பின்னரே மற்ற கோயில்களுக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில் கல்வெட்டுக்கள், சிற்பங்கள் ஆகியவற்றை நோக்கும்போது இக்கோயில் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம்...
| 06:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 12:30 PM IST - 08:30 PM IST | |
| காலை ஆறு மணிமுதல் மதியம் பன்னிரண்டு முப்பது மணிவரைலும் மாலை நான்கு மணிமுதல் இரவு எட்டுமுப்பது மணி வரையிலும் பக்தர்கள் தரிசன நேரமாகும். விசேஷ காலங்களில் காலை ஐந்து முப்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திருக்கோவில் நடை திறந்திருக்கும் | |