அருள்மிகு செல்லியாண்டியம்மன் திருக்கோயில், Bhavani - 638301, ஈரோடு .
Arulmigu Selliyanidyamman Temple, Bhavani - 638301, Erode District [TM010242]
×
Temple History
தல வரலாறு
காவிரிக் கரையில் அமைந்த அழகான புண்ணிய தலம் இந்த கூடுதுறை பவானி. இந்த பவானியில் தான் மக்களையும் வியாபாரிகளையும் காக்கும் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் வீற்றிருக்கிறார். இவரே இவ்வூரின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார்.
மிகப் பரந்த விரிந்த பரப்பில் சுற்றிலும் வீடுகளும் கட்டடங்களும் திகழ பெரிய கோயிலாகத் திகழ்கிறது அம்பிகையின் இந்த திருக்கோயில். பவானியும் காவிரியும் இருபுறமும் ஓட நீரால் சூழப்பட்ட பகுதியில் கோயில் அமைந்துள்ளது.
செல்லியாண்டி அம்மன் கோயில் மிகப்பெரியதாக இல்லை என்றாலும் அழகாகத் தெரியும். முகப்பில் ஐந்து கலசங்களுடன் கூடிய சிறிய கோபுரம். முதல் நிலையில் அம்பிகையின் சுதைச் சிற்பத்தைக் காணலாம். அம்மன் எட்டு கரங்களுடன் தம் கரங்களில் ஆயுதங்கள் திகழ அழகாகக் காட்சி அருள்கிறார்.
கோயிலின் மண்டபம் நீண்ட பெரிதாகச் செல்கிறது....காவிரிக் கரையில் அமைந்த அழகான புண்ணிய தலம் இந்த கூடுதுறை பவானி. இந்த பவானியில் தான் மக்களையும் வியாபாரிகளையும் காக்கும் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் வீற்றிருக்கிறார். இவரே இவ்வூரின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார்.
மிகப் பரந்த விரிந்த பரப்பில் சுற்றிலும் வீடுகளும் கட்டடங்களும் திகழ பெரிய கோயிலாகத் திகழ்கிறது அம்பிகையின் இந்த திருக்கோயில். பவானியும் காவிரியும் இருபுறமும் ஓட நீரால் சூழப்பட்ட பகுதியில் கோயில் அமைந்துள்ளது.
செல்லியாண்டி அம்மன் கோயில் மிகப்பெரியதாக இல்லை என்றாலும் அழகாகத் தெரியும். முகப்பில் ஐந்து கலசங்களுடன் கூடிய சிறிய கோபுரம். முதல் நிலையில் அம்பிகையின் சுதைச் சிற்பத்தைக் காணலாம். அம்மன் எட்டு கரங்களுடன் தம் கரங்களில் ஆயுதங்கள் திகழ அழகாகக் காட்சி அருள்கிறார்.
கோயிலின் மண்டபம் நீண்ட பெரிதாகச் செல்கிறது. உள்ளே பெரிய முகப்பு மண்டபம், அண்மைக்கால கட்டுமானத்தில் அழகாகத் திகழ்கிறது. உள்ளே செல்லும்போது உலோகத்தால் ஆன சூலங்கள் நிறுத்தப்பட்டு அவற்றில் எலுமிச்சை செருகி வழிபாட்டுக்கு வைத்திருக்கிறார்கள்.
முன்னே மணிகள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. இருகல் தூண்களின் மேல் கல் மேலே அமைத்து ஊஞ்சலைப் போலக் கட்டி உள்ளனர். கொடிமரம் பித்தளை தகடு போர்த்தப்பட்டு அழகாகத் திகழ்கிறது. உள்ளே செல்லும் போது தும்பிக்கை நாயகனின் திருமேனியை தரிசிக்கலாம். தல மரத்தின் அடியில் திகழும் சிறு சன்னதியில் விநாயகர் அருள் புரிகிறார்.
தலமரத்தைச் சுற்றி நாகர்களின் பிரதிஷ்டை அழகாக அமைந்து மஞ்சள் வஸ்திரம் சாற்றி பூக்கள் இட்டு, மஞ்சள் குங்குமம் சேர்த்து வணங்குகின்றனர் பக்தர்கள். கால பைரவருக்கு அமைந்த அழகிய சன்னிதியில் பைரவர் தன் வாகனத்துடன் நின்றிருக்க மேலே நிதானத்தில் சுதை வடிவில் திகழ்கிறார் பைரவர்.
அய்யனார் சன்னதி இந்த ஆலயத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது. அதில் குதிரை உருவங்கள் இரண்டு பெரிதாகச் சதை வடிவில் செய்யப்பட்டு அய்யனாரின் சன்னதியை அடையாளப்படுத்துகிறது.
அடுத்து சன்னதி வளம் வரும் போது கருவறை விமானத்தைத் தரிசிக்கலாம். இது வழக்கமான விமானம் போல் அமையாமல் இன்னொரு கோபுரம் போல் திகழ்கிறது. மூன்று கலசங்களுடன் கூடிய கோபுர அமைப்பு கொண்ட கருவறை விமானம் அன்னை பராசக்தியின் இந்த ஆலயத்துக்குத் தனித்துவத்தைக் காட்டுவது தான்.
கருவறையில் அம்பிகை மிக அழகாகத் திகழ்கிறார் பக்தர்களின் அபிஷேகத்தை அவர்களின் கைகளாலேயே ஏற்கிறார். இது இங்கே மேலும் சிறப்பாகும். அம்மனின் மங்கள ரூபத்தை நம் மனதில் பதித்துக்கொண்டால் நம் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம்.