செல்வமிகு கொங்கு நாட்டில் அருளாளர்களால் பாடல் பெற்ற கொங்கு ஏழு சிவாலயங்களில் திருநணா என்றழைக்கப்படுவதும் வாணி நதியும், காவேரி நதியும், அமுத நதியும் ஒருங்கே சங்கமித்து வளம் பலவார்க்கும் கூடல் நகரம், திருவேணி சங்கமம் கூடுதுறை, தென்கயிலை எனப்படும் பவானி நகர்தனிலே சிவாலயத்திற்கு வடபால் எழுந்தருளியிருப்பவளும், குடகு பகுதியிலே பிறந்து எங்கும் வளங்களை நிரப்பி பயன்சார் செடி, கொடி மரங்களை வளர்த்து உயிர்களை காத்து இம்மையிலும் மறுமையிலும் நற்கதி தரும் காவேரி ஆற்றின் கரையிலே அமர்ந்து அருள்பாலித்து வருபவளும், பதினெட்டுப்பட்டி கிராம அதிதேவதையாக அருளாட்சி புரிந்து வருபவளும், அண்டிய அனைவரது மனோநிலைக்கு தக்கபடி ஓசையில் சத்தமும், வித்தில் முளையும், பூவில் வாசமும், பழத்தில் சுவையும், கரும்பில் சர்க்கரையும், சொல்லின் முடிவில் பொருளும் போல...