அருள்மிகு மல்லிகார்ஜூனசாமி திருக்கோயில், தாளவாடி, கொங்கஹள்ளி - 638461, ஈரோடு .
Arulmigu Mallikarjunasamy Temple, -, Kongakalli - 638461, Erode District [TM010243]
×
Temple History
தல வரலாறு
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு திப்புசுல்தான் மன்னர் காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மல்லிகார்ஜுனன் மாதேஸ்வரன் என்ற இரண்டு சகோதர முனிவர்கள் தமிழ்நாடு வனத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கொங்கஹள்ளி என்ற இடத்திற்கு வந்தவுடன் மல்லிகார்ஜுன் இந்த இடம் அமைதியாகவும் நன்றாகவம் இருக்கிறது. அதனால் இங்கேயே இருந்து விடலாம் என்று சகோதரர் மாதேஸ்வரனிடம் கூறினார். இங்கு வேண்டாம் வேறு இடத்திற்கு சென்று விடலாம் என்று மாதேஸ்வரன் கூறினார். வேண்டாம் நான் அமைதியான இடத்தில் இருக்க விரும்புகிறேன். அதனால் நான் இங்கேயே இருந்து விடுகிறேன், நீங்கள் வேண்டுமானால் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என்று மல்லிகார்ஜுனன் மாதேஸ்வரனிடம் கூறினான். நான் வேறு இடத்திற்குச்...சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு திப்புசுல்தான் மன்னர் காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மல்லிகார்ஜுனன் மாதேஸ்வரன் என்ற இரண்டு சகோதர முனிவர்கள் தமிழ்நாடு வனத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கொங்கஹள்ளி என்ற இடத்திற்கு வந்தவுடன் மல்லிகார்ஜுன் இந்த இடம் அமைதியாகவும் நன்றாகவம் இருக்கிறது. அதனால் இங்கேயே இருந்து விடலாம் என்று சகோதரர் மாதேஸ்வரனிடம் கூறினார். இங்கு வேண்டாம் வேறு இடத்திற்கு சென்று விடலாம் என்று மாதேஸ்வரன் கூறினார். வேண்டாம் நான் அமைதியான இடத்தில் இருக்க விரும்புகிறேன். அதனால் நான் இங்கேயே இருந்து விடுகிறேன், நீங்கள் வேண்டுமானால் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என்று மல்லிகார்ஜுனன் மாதேஸ்வரனிடம் கூறினான். நான் வேறு இடத்திற்குச் செல்கிறேன் என்று மாதேஸ்வரன் கிழக்கில் நேராகச் சென்று மாதேஸ்வரன் மலையில் ஐக்கியமாகிவிட்டார். மல்லிகார்ஜுனன் அங்கிருந்து நேர்மேற்கில் சிறுது தூரம் சென்று ஒரு முற்புதரில் உயிருடன் ஐக்கியமாகிவிட்டார். அந்த இடத்தில் சுயம்புலிங்கம் வளரத் தொடங்கியது. ஒருநாள் வனத்தில் புல் மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று சுயம்புலிங்கம் உள்ள இடத்திற்கு சென்று சுயம்பு லிங்கத்தின் மேல் தன் மடியிலிருந்து தானாக பால் சுரந்தது. இரவில் அப்பசு வீட்டிற்கு சென்று விட்டது. பசுவின் உரிமையாளர் அப்பசுவில் பால் சுரந்துள்ளார். பசுவின் மடியில் பால் வரவில்லை. ரத்தம் வந்துள்ளது. அவர் திடுக்கிட்டுப் போனார். மறுநாள் காலையில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு அப்பசுவை வனத்திற்கு ஓட்டிச்சென்றுள்ளார். அப்பசு வனத்திற்குச் சென்று சுயம்புலிங்கம் மீது பால் சொரிந்து கொண்டிருந்தது. அதை பசுவின் உரிமையாளர் பார்த்துவிட்டு ஊருகக்குள் சென்று பெரியவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வனத்தில் சுயம்புலிங்கம் வளர்ந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்து தோட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள்வந்து நான்தான் மல்லிகார்ஜுனசுவாமி எனக்கு இந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள் என்று கூறினார். அன்று முதல் அவ்விடத்தில் கோயில் கட்டி மல்லிகார்ஜுனசுவாமி என்று பெயர் சூட்டி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.