Screen Reader Access     A-AA+
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - 638401, ஈரோடு .
Arulmigu Bannari Mariamman Temple, Bannari - 638401, Erode District [TM010245]
×
Temple History

தல பெருமை

அனைத்து ஆற்றல்களுக்கும் ஆதாரமாக இருப்பது இறையாற்றலாகும்.அவ்விறையாற்றலே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு திருவிடங்களில் குடி கொண்டுள்ளது. இவ்வாற்றலே கொங்குநாட்டின் வடமேற்கு எல்லையருகில் மைசூர் செல்லும் வழியில் பண்ணாரியில்,அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் என்னும் பேராற்றலாக எழந்தருளியுள்ளது .பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளது. இன்றைக்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும்.காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும்.இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது. திம்பம் மலையின் அடிவாரம் தென்குமரி தெய்வத்தின் அவதாரம்...