அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில், Pavalamalai, Gobichettaipalayam - 638476, ஈரோடு .
Arulmigu Muthukumarasamy Temple, Pavalamalai, Gobichettaipalayam - 638476, Erode District [TM010252]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பா.வெள்ளாளபாளையம் கிராமத்தில் உள்ள பவளமலை, அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சட்டப்பிரிவு 46ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கோபி வட்டம், பச்சைமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் குழுக்கோயிலாகும். இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள அம்மன் திருக்கோயில்களில் பழம்பெருமை வாய்ந்த திருக்கோயிலாகும். இங்கே உள்ள முருகப்பெருமான் இளமை தோற்றத்துடன் கையில் தண்டுடன் இடையில் கோவணத்துடன் உச்சிக்குடுமியுடன் முத்துக்குமாரசுவாமி கிழக்கு நோக்கி காட்சி தருவது ஒரு சிறப்பு. வருபவரை எல்லாம் என்று வந்தனை என்று கேட்கும் தோரணையுடன், முகத்தில் குறுஞ்சிரிப்புடன், அழகு தவழும் தோற்றத்துடன் காண்போரை எல்லாம் சுண்டி இழுக்கும் காந்த பிரானாக சபந்த பிரானாக...ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பா.வெள்ளாளபாளையம் கிராமத்தில் உள்ள பவளமலை, அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் சட்டப்பிரிவு 46ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கோபி வட்டம், பச்சைமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் குழுக்கோயிலாகும். இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள அம்மன் திருக்கோயில்களில் பழம்பெருமை வாய்ந்த திருக்கோயிலாகும். இங்கே உள்ள முருகப்பெருமான் இளமை தோற்றத்துடன் கையில் தண்டுடன் இடையில் கோவணத்துடன் உச்சிக்குடுமியுடன் முத்துக்குமாரசுவாமி கிழக்கு நோக்கி காட்சி தருவது ஒரு சிறப்பு. வருபவரை எல்லாம் என்று வந்தனை என்று கேட்கும் தோரணையுடன், முகத்தில் குறுஞ்சிரிப்புடன், அழகு தவழும் தோற்றத்துடன் காண்போரை எல்லாம் சுண்டி இழுக்கும் காந்த பிரானாக சபந்த பிரானாக இந்த முருகன் திகழ்கிறார். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்நாளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து முத்துக்குமரனை வழிபட்டுச் செல்கின்றனர். சிறிய அளவில் இருந்த பழமையான இத்திருக்கோயிலுக்கு பெரிய அளவில் திருப்பணிகள் செய்து 21.04.1980 ம் நாள் குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் இத்திருக்கோயிலில் 04.03.2004ல் குடமுழுக்கு நடைபெற்றது. திருக்கோயிலின் பழமை குறித்தான கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்ற விபரம் பணிவுடன் தெரிவிக்கப்படுகிறது.