Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், Perundurai, Perundurai - 638052, ஈரோடு .
Arulmigu Sellandiamman Temple, Perundurai, Perundurai - 638052, Erode District [TM010275]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் பெருந்துறை நகரின் மத்தியில் குன்னத்தூர் சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் உபகோயில்களாக அருள்மிகு கோட்டை மாரியம்மன், முனியப்பசாமி திருக்கோயில்கள் உள்ளன. அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் அம்மன் கவுண்டர்கள் இனமான காடை குலம், மேதி குலத்தோரின் குலதெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள் வேண்டியவர்களுக்கு வேண்டும் வரம் அளிக்கும் அம்மனிடம் பூவாக்கு கேட்டுநினைத்த காரியம் கைகூட அருள்பாலித்து வருகிறாள். செல்லாண்டியம்மன் திருக்கோயில் முற்றிலும் ஆதி தொட்டேசைவமுறைகளில்வழிபடும் தெய்வாகும். மகாமண்டபத்தின் இடப்புறம் விநாயகர் சன்னதிஉள்ளது. அம்மனின் வாகனங்களாகவழிபட்டுவரும் சுதையால்ஆன இரு குதிரைகள்அழகாகஅமைந்துள்ளது. கருவறை,அர்த்த மண்டபம் மகாமண்டபத்தை சுற்றிலும் பக்தர்கள்வழிபட்டு சுற்றிவரநல்லமுறையில்பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. ...