Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிராட்டியம்மன் திருக்கோயில், -, Chennimalai - 638051, ஈரோடு .
Arulmigu Pirattiaman Temple, -, Chennimalai - 638051, Erode District [TM010305]
×
Temple History

தல வரலாறு

இந்த ஊர் தோன்றிய காலத்திலிருந்து சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே இத்திருக்கோயிலும் எடுக்கப் பெற்று குடுமை வேட்டுவக் கவுண்டர்களால் பக்தி சிரத்தையோடு இப்பிராட்டியம்மன் வழிபட்டு வரப்படுவது சிறப்புக்குரியதாகும். சோழன் புர்வ பட்டயம் இத்திருநகரின் முதலில் அமைந்திருந்து திருக்கோயில் பிராட்டியம்மன் கோயில்தான் என்று கூறுகிறது. சோழன் மலை திருக்கோயிலின் திருப்பணியினை துவங்கிடும் போது பிடாரியம்மன் எனும் பிராட்டியம்மனுக்கு நரபலிமுதலான நாலுபலியும் தந்து திருப்பணியினை துவக்கினான் என பட்டயம் கூறுகின்றது. இவ்வம்மனின் பெயரிலியே பிடாரியூர் மற்றும் காளிநகர் என அழைக்கப்படுகிறது. பிராட்டியம்மன் திருக்கோயில் விமானம் சுமார் 75 அடி உயரமுடைய கருங்கற்களால் எடுக்கப்பட்டுள்ளது. அம்மனுக்குரிய கருவறையும், அதனை ஒட்டிய மகா மண்டபமும் இவ்வற்றோடு அழகிய திருச்சுற்றினையும் பெற்றுள்ளது. பிராட்டியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் 3 1/2 அடி உயரத்தில்...