அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில், Chavadipalayam, Erode - 638104, ஈரோடு .
Arulmigu Samundiamman Temple, Chavadipalayam, Erode - 638104, Erode District [TM010312]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், சாவடிப்பாளையம், அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில் சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும். ஈரோடு மாநகர், வ.ஊ.சி.பூங்கா, அருள்மிகு மகாவீர அஞ்சநேயர் திருக்கோயில் செயல் அலுவலரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நான்காம் நிலை திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு ஒருகால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலுக்கு காங்கயம்பாளையம் கிராமம் சர்வே எண்.741/1,2,3ல் 1.88 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்படி நிலம் வருடாந்திர ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் மைசூரில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோயிலுக்கு நிகரான...ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், சாவடிப்பாளையம், அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில் சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும். ஈரோடு மாநகர், வ.ஊ.சி.பூங்கா, அருள்மிகு மகாவீர அஞ்சநேயர் திருக்கோயில் செயல் அலுவலரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நான்காம் நிலை திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு ஒருகால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலுக்கு காங்கயம்பாளையம் கிராமம் சர்வே எண்.741/1,2,3ல் 1.88 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்படி நிலம் வருடாந்திர ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் மைசூரில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோயிலுக்கு நிகரான சக்தி வாய்ந்த திருக்கோயிலாகவும், இத்திருக்கோயில் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கிராம தேவதையாக விளங்கி வருகிறது.
இத்திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது 14 ஆண்டுகளுக்கு மேலானதாலும் திருக்கோயிலிலுள்ள சன்னதி விமானங்கள் மராமத்து செய்து வர்ணம் பூசுவதற்கு மேற்படி திருக்கோயிலினை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கிட மத்திய தொல்பொருள்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டதனை தொடர்ந்து, துணை கண்காணிப்பாளர், மத்திய தொல்பொருள்துறை அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு, இணைப்பில் கண்டுள்ள ஆய்வு குறிப்பின் படி இத்திருக்கோயிலின் விமானங்கள் பழமை மாறாமல் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில்தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் சமர்ப்பிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் கல்வெட்டுக்கள் மற்றும் புராதான சிற்பங்கள் ஏதுமில்லை
இத்திருக்கோயிலுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக தெரியவருகிறது. இத்திருக்கோயிலின் வரலாறானது மைசூரை ஆண்ட மன்னரின் முக்கிய தளபதி அவர்களால் சாமுண்டியம்மன் இங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டதாக வாய்மொழி வரலாறு கூறுகிறது. மேற்படி திருக்கோயில் அமைக்கப்பட்ட காலம் தெரியவரவில்லை. இத்திருக்கோயில் மகாமண்டபத்தில் நான்குபட்டை, எட்டுப்பட்டை, போதிகை அமைப்புகளுடன் தூண்கள் உள்ளது.